லீக் ஆனது விஜய்யின் சர்கார் பட சண்டை காட்சி..! அதிர்ச்சியில் படக்குழு .! வைரலாகும் வீடியோ .!

0
1634
Sarkar

இளையதளபதி விஜய்யின் 62 வது படமான ‘சர்கார்’ படத்தின் பிர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் கடந்த ஜூன் 21 ஆம் தேதி வெளியானது. அதனை தொடர்ந்து அடுத்தநாள் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் இரண்டாவது போஸ்டரும் வெளியானது. தற்போது இந்த படத்தின் ஓரு காட்சி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

sarkar

இந்த இரண்டு போஸ்டர்கலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் ‘சர்கார்’ படத்தின் பேச்சிக்குள் தான் பரவலாக பரவி வந்தது. விஜய் பிறந்த நாளன்று இந்த படத்தின் போஸ்ட்கள் சமூக வலைதளங்களில் சர்கார் படத்தின் #tag கள் பல2 லட்சம் நபர்களால் விரும்பப்பட்டு வந்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து வந்தனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் சில வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களையும், படக்குழுவினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோ காட்சியில் நடிகர் விஜய் ஒரு கருப்பு காவல் துறை வேனில் இருந்து இறங்கி வருகிறார். அந்த வீடியோவில் மிகவும் சோர்வாக காணப்படும் விஜய் தள்ளாடி நடந்தபடிநிற்கிறார்.தற்போது இந்த வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. அதில் விஜய் ஒரு மேடையில் அமர்ந்து கொண்டு இருக்கிறார். அவருடன் கரு. பழனியப்பன் அமர்ந்திருக்கிறார். விஜய் பின்னால் தெரியும் திரையில் கட்சி இணைப்பு கூட்டம் என்று எழுதி இருக்கிறது. இதனால் இந்த படம் கண்டிப்பாக அரசயில் சம்மந்தபட்ட கதையாக தான் இருக்கும் என்று பலரும் கணித்து வந்தனர். தற்போது இந்த படத்தின் வீடியோ காட்சிகளே வெளியாகியுள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் படக்குழு குழம்பியுள்னர்.