கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை இயக்க, சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிக்கிறார். படத்திற்கான கதை இன்னும் தயாராகவில்லை என தெரிகிறது. இதனால் படத்தின் நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர் மற்றும் டெக்னீசியன்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
ஆனால் ரஜினிக்கு வில்லனாக நடிக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதியிடம் பேசப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனாக நடித்தால் நாம் நினைத்துக்கூட பார்க்காத கதையில் ரஜினி நடிக்கிறார் என பொருள்படும். இதற்கு முன்னர் விக்ரம்-வேதா படத்தில் மாஸ் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார் விஜய் சேதுபதி.




