விஜய் சேதுபதி அடுத்த படத்தின் கெட்டப் இதுதான.! படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம்.!

0
533

தென்மேற்கு பருவ காற்று, தர்மதுரை போன்ற படங்களை தொடர்ந்து தற்போது சீனு ராம சாமி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் ‘மாமனிதன்’ என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை பற்றிய அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

Vijay-sethupathi

விஜய்சேதுபதி, காயத்ரி, குருசோமசுந்தரம் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் பிரபல மேடை பேச்சாளரும், நடிகருமான லியோனின் மகன் லியோ சிவகுமாரும் முதன் முறையாக நடிகராக அறிமுகமகிறார். அதனை சமீபத்தில் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஆட்டோ ட்ரைவராக நடிக்கிறார் என்று ஏற்கனவே தழுவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அதனை உறுதிபடுத்தும் வகையில் விஜய் சேதுபதி காக்கி ஆடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியகியுள்ளது.

மாமனிதன் படத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால் இசை. இளையராஜா தனது மகன்கள் யுவன், கார்த்திக் ராஜா ஆகியோருடன் சேர்ந்து இசையமைக்கிறார். பாட்டுக்கள் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை.

-விளம்பரம்-

Advertisement