பாகுபலி தயாரிப்பாளர் படத்தில் கமிட் ஆன விஜய் சேதுபதி..!மீண்டும் இணைந்துள்ள வெற்றி கூட்டணி..!

0
209

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஒரு பிஸியான நடிகராக இருந்து வருகிறார். அரைடஜன் படத்திற்கு மேல் கையில் வசம் வைத்துள்ளார் விஜய் சேதுபதி.மேலும், “சீதக்காதி”, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் வைட்டிங்கில் உள்ளது.

Vijaysethupathi

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் சேதுபதி நடித்த “பண்ணையாரும் பத்மினி, சேதுபதி” போன்ற வெற்றி படங்களை இயக்கிய அருண்குமார் என்பவர் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

மேலும், இந்த படத்தை ‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்ட படத்தை வெளியிட்ட S.N.ராஜராஜனின் கே.புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்து வருகிறார்.

Vijay Sethupathi and Anjali to pair up for the second time

கே.புரொடக்‌ஷன்ஸ்சுடன் இணைந்து இந்த படத்தை இசையமைப்பாளருமான யுவன்சங்கர்ராஜா, தயாரிப்பாளர் இர்பான் மாலிக் ஆகியோரும் தயாரிக்கின்றனர்.படத்தின் படப்பிடிப்புகள் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் தாய்லாந்தில் நடைபெற உள்ளது என்று படத்தின் இயக்குனர் அருண் குமார் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.