புதிய கீதை இல்லை, யுவன் இசையில் நாசருடன் இணைந்து விஜய் பாடிய ஒரே ஒரு பாடல் – இதோ வீடியோ.

0
1443
Vijay
- Advertisement -

விஜய்யின் தளபதி 68 படம் குறித்த அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு.

-விளம்பரம்-

இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, ஷ்யாம் போன்ற பலர் நடித்து இருந்தார்கள். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். குடும்ப பின்னணியை மையமாக கொண்ட கதை. இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது. மேலும், வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.

- Advertisement -

விஜய் திரைப்பயணம்:

இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது சென்னையில் மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

லியோ படம்:

இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு இயக்குனர் ரத்னகுமார் மற்றும் இயக்குனர் தீரஜ் வைதி ஆகியோர் கதை மற்றும் வசனம் எழுதுவதில் பணியாற்றி வருகிறார்கள். இதனை அடுத்து நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது இந்த தகவல் உறுதியாகி இருக்கிறது. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

-விளம்பரம்-

தளபதி 68 படம்:

இந்த படம் தொடர்பாக பத்து மாதங்களுக்கு முன்பே வெங்கட் பிரபு விஜய் சந்தித்து இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் தளபதி 68 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. பலரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவனா? அனிரூத்தா? என்று கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் தற்போது யுவன் சங்கர் ராஜா தான் தளபதி 68 படத்திற்கு இசையமைப்பாளர் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கடந்த 2003ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த புதிய கீதை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார்.

விஜய்-யுவன் கூட்டணி:

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா- விஜய் இணைந்திருக்கிறார்கள். பொதுவாகவே விஜய் தன்னுடைய படங்களில் ஒரு பாடலை பாடுவது வழக்கம் தான். ஆனால், புதிய கீதை படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் எந்த ஒரு பாடலையும் பாடவில்லை. ஆனால், விக்னேஷ் ஹீரோவாக நடித்திருந்த வேலை என்ற படத்தில் காலத்துக்கு ஏத்த ஒரு கானா என்ற பாடலை யுவன் இசை அமைக்க விஜய் பாடியிருந்தார். ஆகையால், தளபதி 68 படத்தில் விஜய் பாடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement