டாப் கியரில் செல்லும் விஜய் கட்சி, புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட விஷயம், ஆள் சேர்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆஃபர். என்ன தெரியுமா?

0
369
- Advertisement -

விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு புதிய செயலி அறிமுகப்படுத்த இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். கடந்த சில வாரங்களாகவே விஜய்யின் புது கட்சி குறித்த அப்டேட் தான் வைரலாகி வருகிறது. விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதை அடுத்து தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள்.

-விளம்பரம்-

இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தை கதிகலங்க வைத்தது. மேலும், விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டது. அதோடு விஜய் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். இது எல்லாம் அரசியல் வட்டாரத்தில் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பின் அனைவரும் எதிர்பார்த்தபடி விஜய் அரசியலில் களமிறங்குவதை உறுதி செய்து விட்டார்.

- Advertisement -

தமிழக வெற்றி கழகம் :

அந்த வகையில் சமீபத்தில் விஜய் தன்னுடைய புதிய கட்சியின் பெயரை அறிவித்து தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்து இருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்து இருக்கிறார் விஜய். இது ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. பின் அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். மேலும், விஜய் அவர்கள் கட்சியின் கொடி, சின்னம் ஆகியவற்றை தேர்வு செய்யும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆலோசனைக் கூட்டம்:

இதை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் விஜய் உத்தரவின் பேரில் சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைமை நிர்வாகிகள் கலந்து இருந்தார்கள். இந்த கூட்டத்தில் கட்சிக்கு புதிதாக இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதுக்காக சிறப்பு செயலி உருவாக்கப்படும் என்றும் அடுத்த வாரம் முதல் அந்த செயலி செயல்பாட்டுக்கு வர இருப்பதாகவும் கூறப்பட்டது.

-விளம்பரம்-

புது செயலி குறித்த தகவல்:

தற்போது அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் மாவட்டம், மாநகர், நகரம், பேரூர், ஒன்றிய ஊராட்சி வார்டு வாரியாக நடைபெற இருக்கிறது. பின் கட்சியின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் கட்சி பதவிகள் குறித்தும் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று கூறியிருக்கிறார்கள். அதில் முதலில் மகளிர் அணிக்கான நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறது.

உறுப்பினர் சேர்க்கை குறித்து சொன்னது:

அதுமட்டுமில்லாமல் அதிகமான உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகளுக்கு கட்சி பதவிகளில் முன்னுரிமை வழங்கப்பட இருப்பதாகவும், புதிய உறுப்பினர் சேர்க்க மாவட்ட சட்டமன்ற வாரியாக புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். இந்த மேற்கொண்ட பணிகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளை புஸ்ஸி ஆனந்த் அடிக்கடி தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறார். கூடிய விரைவிலேயே புதிய நிர்வாகிகளும், பதவிகள் குறித்தும் அறிவிக்கப்படும். மேலும், இந்த சிறப்பு செயலியில் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், போன் நம்பர் ஆகியவற்றை இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உறுப்பினராக சேரலாம் என்றும் கூறியிருக்கிறார்கள்.

Advertisement