Rolex போல சிறப்பு தோற்றத்தில் விஜய் – அதுவும் யார் படத்தில் பாருங்க (இவரு தான் உசுப்பி இருப்பார் போல)

0
602
rolex
- Advertisement -

தளபதி விஜய்யிடம் அட்லி கோரிக்கை வைத்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து இருக்கிறார். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். இந்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார். இதில் விஜய்யை வைத்து முதலாக தெறி என்ற படத்தை இயக்கி இருந்தார். ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி இந்த படம் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருந்ததால் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. பின் அட்லீ மெர்சல் படத்தை இயக்கி இருந்தார். இளைய தளபதியாக இருந்த விஜய் தளபதி விஜய் ஆக ஆனதே மெர்சல் படத்திற்குப் பிறகு தான். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

- Advertisement -

விஜய்-அட்லீ படம்:

இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜயை வைத்து பிகில் என்ற படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய் அவர்கள் ராயப்பன், மைக்கேல் என்று அப்பா – மகன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படத்தில் மைக்கேல் கதாபாத்திரத்தை விட ராயப்பன் கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பேசப்பட்டு இருந்தது. இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார். பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார்.

அட்லீ – ஷாருக்கான் கூட்டணி:

அதோடு அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த படம் அதிரடி, ஆக்சன் கதைக்களத்தை கொண்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு ஜவான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 2023 இல் ஜூன் மூன்றாம் தேதி ஜவான் படம் திரையரங்குகளில் வெளியாகயுள்ளது. மேலும், ஷாருக்கானின் படத்தையும் அட்லீ காப்பி அடித்து தான் எடுத்து இருக்கிறார் என்று நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ஜவான் படம் காப்பி:

அது என்னவென்றால், 1990 ஆம் ஆண்டு Liam Neeson ஹீரோவாக நடித்த Darkman படத்தின் காப்பி தான் ஜவான் திரைப்படம் என்று கூறிவருகின்றனர். அதுமட்டுமில்லாமல், இந்த படம் பல படங்களில் இருந்து காப்பி என்று இணையத்தில் கேலி கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் அட்லி அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அட்லி அவர்கள் தளபதி விஜய் இடம் கோரிக்கை வைத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் விக்ரம். இந்த படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார்.

அட்லீ வைத்த கோரிக்கை:

இந்த படத்தில் அவருக்கு ஐந்து நிமிட காட்சி என்றாலும் அனைவரையும் அசர வைத்து இருந்தார். அதே போல் ஜவான் படத்திலும் தளபதி விஜய்யை கேமியோ தோற்றத்தில் நடிக்க வைக்க அட்லி ஆசைப்படுகிறாராம். இதற்கு விஜய் மட்டும் சம்மதித்தால் ஷாருக்கான் மற்றும் தளபதி விஜய் இருவரையும் ஒரே திரையில் காண்பிக்கிற சரித்திர நிகழ்வு உண்டாகும் என்று கூறப்படுகிறது. மேலும், ஷாருக்கான் மற்றும் விஜய் இருவருமே நன்கு நடனம் ஆடக்கூடியவர். பல விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் இவர்கள் இருவரும் ஒன்றாக தோன்றி இருக்கின்றார்கள். இந்த நிலையில் ஜவான் படத்தில் விஜய் நடிப்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

Advertisement