நன்றி மறந்த விஜய் – சூர்யாவின் டீவீட்டால் விஜய்யை விமர்சிக்கும் நெட்டிசன்கள். இதான் காரணம்.

0
398
- Advertisement -

கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். அதோடு இவர் அடிக்கடி தொடர் சிகிச்சைக்கு சென்று வருகிறார். இப்படி இருக்கும் கடந்த மாதம் விஜயகாந்த் அவர்கள் இருமல், சளி அதிகமாக உள்ளதால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விஜயகாந்த் குறித்து பல்வேறு வதந்திகளும் வந்த வண்ணம் இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். மேலும், விஜயகாந்துடன் எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

கேப்டன் விரைவில் குணமடைய வேண்டும் என்று பல்வேரு பிரபலங்கள் கூறி வரும் நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ”அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.! கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்.!!” என குறிப்பிட்டுள்ளார். 

நடிகர் சூர்யா, விஜயகாந்துடன் இணைந்து எங்கள் அண்ணா படத்தில் நடித்து இருக்கிறார். அதே போல சூர்யா நடித்த மாயாவி படத்தில் விஜயகாந்த் ஒரு சிறு ரோலில் நடித்து இருப்பார். தன்னுடன் இரண்டு படங்களில் நடித்த கேப்டனுக்காக சூர்யா போட்ட இந்த பதிவால் தற்போது விஜய் தான் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார். விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சி கேப்டனுடன் இணைந்து 15 வருடங்களுக்கும் மேலாகவும் பணியாற்றியிருந்தார்கள்.

-விளம்பரம்-

இவர்களுடைய கூட்டணியில் வெளிவந்த வெற்றி, குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்கள் எல்லாம் வெளியாகியிருந்தது. இந்த படங்களிலும் விஜய் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருந்தார். அதற்குப் பிறகு விஜய் வைத்து எஸ் ஏ சி இயக்கிய முதல் படம் நாளைய தீர்ப்பு. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதற்குப் பிறகு விஜய்யும் விஜயகாந்த்தையும் வைத்து ஒரு படம் இயக்க முடிவு செய்தார் எஸ்ஏசி.

அப்போது விஜயகாந்த் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தார். இதனால் தன்னுடைய மகனுடைய எதிர்காலமும் மாறும் என்று நினைத்து இயக்குனர் எஸ்ஏசி கேட்டவுடனே விஜயகாந்த் ஒத்துக்கொண்டார்.அதற்குப் பிறகுதான் செந்தூரப்பாண்டி படம் உருவானது. அந்த படம் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. எஸ்ஏசி நினைத்தது போலவே விஜய்க்கு ஒரு பெரிய ரீச்சை இந்த படம் பெற்றுத் தந்தது.

விஜயகாந்திற்கு தம்பியாக விஜய் நடித்ததன் மூலமாக விஜய்க்கு ரசிகர்கள் அறிமுகமானர்கள். இதைப் பேட்டியிலேயே விஜய் ஒருமுறை கூறியிருக்கிறார்.என்னை மாஸ் ஆடியன்ஸ் நடிகராக ஏற்றுக் கொண்டதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். இப்படி விஜய்யின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு விகித்த கேப்டன் உடல் நிலை பற்றி விஜய, நேரில் சென்று சந்திக்காமல் இருந்தாலும் பரவாயில்லை அவரை பற்றி ஒரு பதிவு கூட போடாதது தான் பலரது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

Advertisement