அந்த நோய்க்கு மாத்திரை சாப்பிட்டு தான் இப்படி ஆகிட்டேன் – ஆள் அடையாளம் தெரியாத அளவு மெலிந்த மெட்டி ஒலி தனம்.

0
557
- Advertisement -

தன்னுடைய நிலைக்கான காரணத்தை குறித்து மெட்டி ஒலி காவிரி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பார்த்து ரசித்து மகிழ்ந்த சீரியல் என்றால் அது மெட்டி ஒலி தான். அதிலும் ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது. இந்த தொடர் 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் தான் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலை திருமுருகன் அவர்கள் இயக்கினார்.

-விளம்பரம்-

இந்த சீரியலில் டெல்லி குமார், காவேரி, காயத்திரி, வனஜா, உமா, ரேகா, சேத்தன், நீலிமா ராணி,போஸ் வெங்கட் மற்றும் திருமுருகன் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். ஆண்டுகள் பல கடந்தாலும் தற்போது வரை மக்கள் மெட்டி ஒலி சீரியலை பற்றி பேசிக் கொண்டு தான் உள்ளார்கள். ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்ற தந்தையும் அவரது குடும்பமும் அதற்குள் நடக்கும் நிகழ்வுகளையும் மையமாக வைத்து தான் மெட்டி ஒலி. இந்த சீரியல் பட்டி தொட்டி எல்லாம் ஹிட்டானது. மெட்டி ஒலி சீரியலில் நடித்த நடிகர்கள் எல்லோருமே மிகப் பெரிய அளவில் பிரபலமானர் என்று சொல்லலாம்.

- Advertisement -

மெட்டி ஒலி சீரியல்:

மேலும், இந்த சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் காவிரி. இவர் தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டங்களில் கலக்கிக் கொண்டிருந்தார். இவர் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடித்த வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்தார். பின் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார். நடிகை காவேரி சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

காவேரி திரைப்பயணம்:

அதனை தொடர்ந்து இவர் மீரா, தங்கம் மற்றும் வம்சம் ஆகிய தொடர்களில் நடித்தார். அதன் பிறகு இவர் 2013 ஆம் ஆண்டு ராகேஷ் என்பவரை திருமணம்செய்து கொண்டு பெங்களூருக்கு சென்று விட்டார். அதன் பிறகு இவர் எந்த ஒரு சீரியலிலும் நடிக்க வில்லை. மேலும், கடந்த ஆண்டு நடந்த மெட்டி ஒலி தொடரில் நடித்தவர்கள் Re-யூனியனுக்கு காவேரி வந்து இருந்தார். இவரை பார்த்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். நடிகை காவேரி அவர்கள் உடல் மெலிந்து பார்க்கவே ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்தார்.

-விளம்பரம்-

காவேரி பேட்டி:

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் காவிரிக்கு என்ன ஆச்சி என்றும் இவ்வளவு வயதாகிவிட்டதா? என்றும் கூறி இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் காவிரி பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், வம்சம் நடித்த முடித்த கையோடு அம்மா இறந்து விட்டார் அந்த நேரத்தில் தான் எனக்கு கல்யாணம் ஆனது. இதனால் எனக்கு தைராய்டு வந்து வீட்டுக்குள்ளே இருந்தேன். நிறைய ஊரில் வாழ்ந்து வந்தோம். ஒரு வேலைக்காக ஒரு வாரத்துக்கு தான் சென்னை வந்தோம். ஆனால், என்னுடைய அண்ணன் இறந்துவிட்டார்.

உடல் மெலிந்த காரணம்:

அதனால் சில விஷயங்களும் நடந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் இங்கே இருக்க வேண்டிய நிலை வந்தது. விரைவில் கிளம்பி விடுவோம். எனக்கு தைராய்டு வந்துவிட்டது. அதனால் மாத்திரை சாப்பிட்டு இருந்தேன். நிறைய வெயிட் போட்டேன். அதனால் மாத்திரை ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டேன். உடனே எட்டு கிலோ வரை குறைந்துவிட்டேன். வெயிட் போடணும். ஆனால், எது செய்தாலும் ஏறவே இல்லை. எனக்கு மீண்டும் படங்களில் நடிக்க எனக்கு ஆசைதான். என்னுடன் நடித்திருந்த விஜி இறந்த விஷயம் கூட எனக்கு இரண்டு நாள் கழித்து தான் தெரிந்தது. நான் யாருடனும் பேசுவதில்லை. 10 வருடமாக வீட்டுக்குள் தான் இருக்கிறேன். எனக்கு நண்பர்கள் என்று யாருமே இல்லை. மெட்டிஒலி இரண்டாம் பாகம் குறித்து இதுவரை எந்த தகவலும் எனக்கு தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

Advertisement