விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினி டிடி எனப்படும் திவ்யதர்ஷினி. காபீ வித் டிடி என்ற நிகழ்ச்சியில் பல சினிமா நட்சத்திரங்களை பேட்டி எடுத்ததன் மூலம் சினிமா நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் பரிட்சயமானார். குறிப்பாக இயக்குனர் கௌதம் மேனனுடன் மிக நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்து வருகிறார் டிடி.
Ok now let’s stop some show ? #Provokesummerfashion2018 walked for Shanu’s Boutique? BridalWear?? pic.twitter.com/xhaXSxjsJ8
— DD Neelakandan (@DhivyaDharshini) June 27, 2018
விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி, விஜய் டிவியில் ஒளிபரப்பான காபீ வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட இவருக்கு கடந்த ஆண்டு விவாகரத்தும் நடைபெற்றது. விவாகரத்துக்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்த் வருகிறார் டிடி.
இவர் சிறு வயதிலேயே சினிமாவிலும் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.அடிக்கடி சுட்டி தனமான புகைப்படங்களை எடுத்து அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடும் பழக்கமுடையவர் டிடி.டிடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது அசத்தலான மாடல் உடைகளிலோ,அல்லது ட்ரெடிஷனலான புடவைகளை அணிந்து தான் தொகுத்து வழங்குவார்.
தற்போது கல்யாண பெண் கோலத்தில் ஒரு பேஷன் ஷோவில் கலந்து கொண்டிருக்கிறார் டிடி .அப்போது எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார், இதை பார்த்த ரசிகர்களும் அழகாக உள்ளது என்று கமெண்ட் செய்கின்றனர்.