எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் சமுத்திரகனிக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா.?

0
283

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்ட’ . கடந்த 2017 ஆம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் ஓராண்டிற்கு மேலாகியும் இன்னும் இந்த படம் வெளியாகாமல் கிடப்பில் இருந்த நிலையில், தற்போது படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

GVM-Dhanush

நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். கடந்த ஆண்டே இந்த படத்தின் “மறுவார்த்தை பேசாதே” என்ற பாடல் ஒன்றும் இணையத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப் பிரபலமானது.

அதன் பிறகு இந்த படத்தின் எந்த தகவலும் வெளியாகவில்லை, இந்த படத்தை குறித்து சமீபத்தில் ஒரு தகவலை அளித்த நடிகர் தனுஷ், இந்த படத்தை விரைவில் வெளியிடுவோம் என்று உறுதியளித்திருந்தார். அதற்கேற்றார் போல இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக துவங்கப்பட்டு, தற்போது பாடல் காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.

sasikumar

இந்த படத்தில் ஒரு முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிக்க இருப்பதாக இருந்ததாம், ஆனால், சில பல காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனது என்று இந்த படத்தின் இயக்குனர் கௌதம் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் நடிகரும், இயக்குனருமான சசி குமார் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. மேலும், இந்த படத்தில் நடிகர் ராணாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறாராம்.