திரைக்கு பின்னால் ஜாக்குலின் இப்படிப்பட்டவரா..? பலருக்கும் தெரியாத உண்மை.!

0
1252
Jaquline
- Advertisement -

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ’கலக்கப்போவது யாரு’ சீசன் 5 ஆரம்பிச்சனால அதில் போட்டியாளர்கள் செம வெயிட்டா இருக்கணும்; புதுபுது ஐடியாக்கள்; புது கான்செப்ட்னு நானும் எங்க டீமும் கன்ட்டென்ட் பற்றி மட்டும்தான் யோசிச்சிட்டு இருந்தோம். தொகுப்பாளர்களா யாரை கமிட் பண்ணலாம்னு ஒரு பேச்சு வரும்போது, தொகுப்பாளர்களே இல்லாமல் நிகழ்ச்சி நடத்தலாம்னுதான் முடிவு பண்ணினோம்.

-விளம்பரம்-

- Advertisement -

அப்பறம் சேனல்ல இருந்து ஆங்கர்ஸ் வச்சுக்கலாம்; ரக்‌ஷனும், ’ஆண்டாள் அழகர்’ சீரியல்ல நடிச்சுட்டு இருக்க ஜாக்குலினும் ஆங்கரிங் பண்ணட்டும்னு சொன்னாங்க. அப்பறம் ஜாக்குலின் என்னைப் பார்க்க வந்தாங்க. நான் அவங்ககிட்ட, ‘சீரியல்ல நடிக்கும் போது ஆங்கரிங் எப்படி’னு கேட்டதும், ‘ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்தேன். இப்போ பண்ணச் சொல்லிட்டாங்க சார்’னு சொன்னாங்க. ரக்‌ஷனைப் அழைச்சு, ‘இவங்கதான் உன்கூட சேர்ந்து ஆங்கரிங் பண்ணப் போறாங்க. ரெண்டு பேரும் பேசி எப்படி பண்றதுன்னு முடிவு பண்ணிக்கோங்க’னு சொல்லி அனுப்பி வெச்சேன்.

முதல் நாள் போட்டியாளர்களோட ஆடிஷன் ஷூட்டிங். போட்டியாளர்கள் யார் என்னனு அவங்களைப் பற்றி ஒரு இன்ட்ரோ கொடுக்கணும். முதல் நாள் ஷூட்டிங்கிலேயே எல்லாரையும் தன்னோட குரலால இம்ப்ரெஸ் பண்ணிட்டாங்க; அப்படி ஒரு காந்தக்குரல் ஜாக்குலினுக்கு. அதுதான் இன்னைக்கு ஜாக்குலினுக்கு பெரிய ப்ளஸா இருக்கு. எப்படி தங்கதுரையோட பழைய ஜோக்கை கிண்டல் பண்ணி ஃபேமஸ் பண்ணிட்டாங்களோ, அதே மாதிரி ஜாக்குலினோட குரலை கிண்டல் பண்ணியே அவங்களே ரொம்ப ஃபேமஸாகிட்டாங்க. ஆனால், ஜாக்குலின் ரொம்ப நல்லா பாடுவாங்க. அதுவும் சில சமயம் ட்ரெண்ட்டாகும்.

-விளம்பரம்-

ரக்‌ஷனும் ஜாக்குலினும் ஆங்கரிங் பண்ணும்போது நிறைய நெகட்டிவ் கமென்ட்ஸ்தான் வந்தது. ’விஜய் டிவி ரொம்ப வருஷம் கழிச்சு ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி பண்றாங்க. ஒரு பெரிய ஆங்கர் வச்சு பண்ணலாமே… ஏன் புது பசங்களை வச்சு பண்றாங்க’னு நிறைய பேரு பேசிக்கிட்டாங்க. போட்டியாளர்கள், நடுவர்கள்னு எல்லாரும் அவங்களை எல்லாரும் கலாய்ப்பாங்க. அவங்க ஏதாவது திருப்பி கலாய்ச்சு பேசினாலும், ‘தம்பி நீ கொஞ்சம் பேசாம இரு’னு சொல்லிடுவாங்க.

ஆனால், எவ்வளவு கலாய்ச்சாலும் ஜாக்குலின் எதுவுமே சொல்ல மாட்டாங்க. முகத்தை பாவமா வச்சுப்பாங்க. இதுவே ஆடியன்ஸ்கிட்ட ஜாக்குலினை அதிகமா ரீச் பண்ண வச்சது. ஆன் ஸ்கிரீனில் அவங்க அமைதியா இருக்குறது மட்டும்தான் ஆடியன்ஸுக்கு தெரியும். ஆஃப் ஸ்கிரீன்ல ஜாக்குலின் எவ்வளவு கோவப்படுவாங்கனு செட்ல இருக்குற எங்களுக்குத்தான் தெரியும்.

’கலக்கப்போவது யாரு’ சீசன் 5க்கு ஆங்கரா வரும் போது ஜாக்குலின் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிச்சுட்டு இருந்தாங்க. எப்போதும் எங்க ஷூட் முடிய லேட் நைட் ஆகும். சில சமயம் விடிய, விடியக்கூட ஷூட்டிங் நடக்கும். அப்போதெல்லாம் என்கிட்ட வந்து, ‘சார், காலையில நான் காலேஜ் போகணும். சீக்கிரமா முடிங்க’னு சொல்லிட்டே இருப்பாங்க. எவ்வளவு லேட்டா ஷூட்டிங் முடிஞ்சாலும் அடுத்த நாள் காலையில் கரெக்ட்டா காலேஜ் போயிடுவாங்க. சில சமயம் எக்ஸாம் முடிச்சிட்டு வந்து ஆங்கரிங் பண்ணியிருக்காங்க.

jaquline

ஜாக்குலினுக்கு அப்பா கிடையாது; அம்மா, தம்பி ஊருல இருக்காங்க. இவங்க இங்க தனியா ஹாஸ்டல்ல இருந்துட்டு வேலைக்குப் போய் படிக்கிறாங்க. அதுவும் லேட் நைட் வரை வேலை இருந்தாலும் பாக்குறாங்க. அந்த விதத்தில் அவங்களை பாராட்டலாம். ஜாக்குலினுக்கு ஆங்கரிங்கைவிட நடிப்பு நல்லா வரும். நானே ஒரு டைம், ‘உங்களுக்கு ஆங்கரிங்கைவிட நடிப்பு நல்லா வருது; நீங்க நடிக்கப் போகலாம்’னு சொல்லியிருக்கேன். இப்போ ‘கோலமாவு கோகிலா’ படத்துல நயன்தாராவுக்கு தங்கச்சியா நடிக்கிறாங்க. முதல் படமே ஜாக்குலினுக்கு பெரிய படமா அமைஞ்சிருக்கு. அவங்களுக்கு நிறைய நல்ல படங்கள் அமைஞ்சு, அவங்களோட ஆக்டிங்ல கரியர் நல்லபடியா அமைய என் வாழ்த்துகள்.

Advertisement