-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

ஈரமான ரோஜாவே ஒளிபரப்பில் நடந்த மிகப்பெரிய குளறுபடி – மன்னிப்பு கேட்ட விஜய் டிவி.

0
2679

விஜய் டிவி ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடந்த தவறுக்கு சேனல் தரப்பில் கேட்டிருக்கும் மன்னிப்பு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் தொடர் தான் ஈரமான ரோஜாவே 2. ஏற்கனவே, ஈரமான ரோஜாவே சீரியலின் முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது வித்தியாசமான கதைக்களத்துடன் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இதில் திரவியம், சித்தார்த், கேப்ரில்லா, ஸ்வாதி என பல நடிகர்கள் நடிக்கிறர்கள். இந்த தொடரும் ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை பல திருப்பங்களுடன்,விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலில் பார்த்தி, ஜீவா இருவரும் அண்ணன், தம்பி. அதேபோல் பிரியா, காவ்யா இருவரும் அக்கா, தங்கை. இதில் காவ்யா-ஜீவா இருவரும் காதலித்து இருந்தார்கள். ஆனால், விதி செய்த வலியால் பார்த்தி- காவியாவையும், ஜீவா-ப்ரியாவையும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

ஈரமான ரோஜாவே 2 சீரியல்:

இப்படி ஜோடி மாறி திருமணம் ஆன பிறகு பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது. பின் ஜீவா- காவ்யா காதலித்த உண்மை வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இதனால் நான்கு பேரும் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள். பின் காவியா கர்ப்பமாக இருப்பதை அறிந்து வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள். ஆனால், காவியா கர்ப்பம் கலைந்துவிடுகிறது. இதனால் காவியா மனம் உடைந்து விடுகிறார். மேலும், காவியாவின் கர்ப்பம் கலைந்த உண்மை வீட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிகிறது. இதனால் அனைவருமே மனமடைந்து அழுகிறார்கள்.

சீரியலின் கதை:

-விளம்பரம்-

பார்த்தி காவியாவை பயங்கரமாக திட்டி சண்டை போடுகிறார். இதை பார்த்த ப்ரியா காவியாவின் கர்ப்பம் கலைந்ததற்கு காரணம் அவள் மட்டும் இல்லை நீயும் தான் என்று சண்டை போடுகிறார். பின் தான் செய்த தவறை பார்த்திபன் உணருகிறார். காவியாவிடம் மன்னிப்பும் கேட்கிறார். ஆனால், காவியா மன்னிக்காமல் அவருடைய வேலை செய்கிறார். முன்பை விட தற்போது பார்தி காவியாவை பயங்கரமாக காதலிக்கிறார். இன்னொரு பக்கம் ஜீவா விவாகரத்து படிவத்தில் கையெழுத்து போட்டதை பார்த்து பிரியா கோபப்பட்டு ஜீவாவிடம் இருந்து பிரிய நினைக்கிறார். இருந்தாலும், ஜீவா எவ்வளவோ கெஞ்சி போராடுகிறார். ஆனால், பிரியா கேட்காமல் வழக்கம்போல் ஜீவாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

நெட்டிசன்கள் விமர்சனம்:

இப்படி இரண்டு ஜோடிகளும் எதிரும் புதிதாக சென்று கொண்டிருக்கும் போது மூணாவதாக பிரியாவின் கடைசி தங்கை ஜீவாவின் தம்பியை காதலிக்கிறார். இருவருக்குமே வேறு ஒரு இடத்தில் சம்பந்தம் ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால், இருவருக்குமே இந்த திருமணத்தில் விருப்பமில்லை. இப்படி அடுத்து என்ன நடக்கும் என்று பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் ஈரமான ரோஜாவே சீரியலை விமர்சித்து நெட்டிசன்கள் கலாய்த்ததற்கு சேனல் தரப்பில் மன்னிப்பு கேட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மன்னிப்பு கேட்ட விஜய் டிவி:

அதாவது, சில தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பான எபிசோடை அப்படியே மீண்டும் நேற்று டிவியில் ஒளிபரப்பி இருக்கிறார்கள். இதைதான் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கலாய்த்து இருக்கிறார்கள். அதிலும் சிலர், இவ்வளவு பெரிய சேனலில் இப்படி ஒரு தவறு நடக்கலாமா என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக விஜய் டிவி போட்ட பதிவு, இது தொடர்பாக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். நேற்று எபிசோடு இன்று ஒளிபரப்பாகும் என்று கூறியிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news