தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
தமிழில் பல கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் “ஸ்ரீமோய் ’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சீரியல் தமிழில் மட்டுமல்ல கன்னட, மராத்தி, மலையாளம், தெலுகு மற்றும் ஹிந்தியிலும் ஒளிபரப்ப படுகிறது.இந்த தொடரின் தமிழகத்தில் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் கே எஸ் சுசித்ரா அவர்கள்.
இதையும் பாருங்க : சும்மா இருக்க முடியுமானு நான் வெறும் நடிப்பா தான் பண்ணேன். ஆனா இப்போ – வடிவேலுவின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ.
இந்த சீரியலில் இல்லத்தரசியின் பொறுப்புகளை எடுத்துரைக்கிறது.மேலும், அவர் படும் பாடுகள் என்ன சில சமயம் பிள்ளைகள், கணவர், மாமியார், மாமனார் இல்லத்தரசியை எப்படி அவமதிக்கிறார்கள். பாக்கியலட்சுமி எல்லாவற்றையும் எப்படி அனுசரித்துப் போகிறாள். ஒரு கட்டத்தில் அவளின் சுயமரியாதையை எப்படி போராடி மீட்டெடுத்தாள் என்பது தான் கதை.
இந்த சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவ தொடங்கியுள்ளது. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி என்ற சுசித்ரா காட்டும் புடவைகள் மற்றும் அவர் பேசும் வசனங்கள் என ரசிகர்கள் மத்தியில் ரீச்சாகி உள்ளது. அதே போல இவருக்கு சீரியலில் இரண்டு மகன்கள் ஒரு மகள். ஆனால், நிஜத்தில் இவருக்கு ஒரே ஒரு மகள் தான். சமீபத்தில் இவர் தனது மகளுடன் சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.