மேக்கப்பிற்கு முன் எடுத்த செல்பி என்று டிடி பதிவிட்ட புகைப்படம்.! என்ன இப்படி இருக்காங்க.!

0
40232
dd

விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் ரசிகர்களின் என்றும் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருவது டிடி எனப்படும் திவ்யதர்ஷினி தான். சமீபத்தில் இவரது 20 ஆண்டுகால தொகுப்பாளினி பணியை பாராட்டி 20 இயர்ஸ் ஆப் டிடி என்ற விழாவும் கொண்டாடப்பட்டது.

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி, விஜய் டிவியில் ஒளிபரப்பான காபீ வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2017 ஆம் ஆண்டு விவாகரத்தும் நடைபெற்றது. விவாகரத்துக்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்து வருகிறார் டிடி.

இதையும் பாருங்க : நம்ம சரவணனின் அழகான குழந்தயை பார்த்துள்ளீர்களா.! புகைப்படம் இதோ.! 

சின்னத்திரையில் வருவதற்கு முன்பாகவே பல திரைப்படங்களில் நடித்து வந்தார் டிடி. மேலும், பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமா நடித்துள்ளார்.எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி தனது புகைபடங்களை வெளியிடுவது வழக்கம்.

This image has an empty alt attribute; its file name is dd-1-498x1024.jpg

அந்த வகையில் சமீபத்தில் டிடி தனது மேககப் இல்லா புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் மேக்கப் அணிவதர்க்கு முன்பாக என்று பதிவிட்டுள்ளார் டிடி. இந்த புகைப்படத்தை கண்டு பலரும் டிடி மேக்கப் இல்லாமலும் அழகாக இருக்கிறார் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

ஆனால், சிலரோ மேக்கப் இல்லாமல் உங்கள் முகத்தை பார்க்க முடியவில்லை என்று கிண்டலடித்தும் வருகின்றனர். டிடி தற்போது விஜய் டிவியில் என்கிட்ட மோததே என்ற தொடரை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.