நம்ம சரவணனின் அழகான குழந்தயை பார்த்துள்ளீர்களா.! புகைப்படம் இதோ.!

0
21663
Saravanan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் பிரபல நடிகர் சரவணனும் ஒருவர். தற்போது பிக் பாஸ் வீட்டில் இவர் தான் பலரின் பேவரைட்டாக இருந்து வருகிறார்.எந்த வம்பிற்கும் போகாமல் மிகவும் நல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார் சரவணன்.

-விளம்பரம்-

அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தனது மனைவி குறித்து பேசிய சரவணன் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதில் தனது முதல் மனைவி குறித்தும் இரண்டாம் மனைவி குறித்தும் நெகிழ்ச்சியாக பேசி இருந்தார் சரவணன்.

இதையும் பாருங்க : மீரா மிதுன் ஒரு பிராடு.! அவரால் தான் நான் பிக் பாஸ் போக முடியல.! புலம்பும் ஷாலு ஷம்மு.!

- Advertisement -

சரவணனுக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். முதல் மனைவிக்கு குழந்தை பிறக்காததால் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் சரவணன். இவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்ததே முதல் மனைவியான சூர்யா தான். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிற்று கிழமை கமலிடம் பேசும் போது கூட சரவணன் தனது குழந்தையை மிகவும் மிஸ் செய்வதாக கூறியிருந்தார். இதானால் பிக் பாஸ் சரவணனுக்கு அவரது குழந்தையின் புகைப்படத்தை சர்ப்ரைஸ் பரிசாக அனுப்பி வைத்தனர். தர்ஷன், அந்த புகைப்படத்தை கொண்டு போய் சரவணனிடம் காட்ட ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் இருந்தார் சரவணன்.

-விளம்பரம்-

பின்னர் தனது குழந்தையின் புகைப்படத்திற்கு முத்தம் கொடுத்த சரவணன், தன்னையும் அறியாமல் கண் கலங்க துவங்கினார்.பின்னர் போட்டியாளர்கள் அனைவரும் அந்த புகைப்படத்தை கண்ட பிறகு தனது படுக்கை அறைக்கு சென்ற சரவணன், தனது குழந்தையின் புகைப்படத்தை அருகில் வைத்துக்கொண்டு ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement