இப்படி எல்லாம் Thumbnail வைக்காதீங்க, Views காக இப்படி பண்ணுவீங்கக – தான் கொடுத்த பேட்டியை கண்டு கடுப்பான ஜாக்லின்.

0
555
jacline
- Advertisement -

கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், தனித்தன்மையான குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் ரசிகர்களை கவர்ந்தவர் ஜாக்லின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த “கானா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார். இவர் விஜய் டிவியில் நடித்து வந்த தேன்மொழி சீரியல் கூட சமீபத்தில் தான் நிறைவடைந்தது.இந்நிலையில் தான் தொகுப்பாளினி ஜாக்குலின் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார் அந்த பேட்டியில் “உங்களுக்கு எப்போதாவது அதிக கோபம் வந்து கொச்சை வார்த்தையால் திட்டியிருக்கிறீர்களா என கேட்கப்பட்டது”

- Advertisement -

அதற்கு பதிலளித்த ஜாக்குலின் “எனக்கு அப்படி கோபம் வந்தால் கத்திவிடுவேன், ஆனால் அதிகபட்சம் நான் மேடையில் எரிய பிறகு கோபம் என்பது வராது. ஆனால் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் கோபம் வந்திருக்கிறது என்றார். “படங்களில் நடிக்கும் பிரபலங்கள் என்று நிகழ்ச்சிக்கு வருபவர்கள் ஒரு சிலர் தொகுப்பாளினி என்றால் எப்படி வேண்டுமானாலும் நாம் நடந்து கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் அவர்களிடம் நடந்து கொள்கின்றனர்.

தொகுப்பாளினி என்று கிடையாது நிகழ்ச்சியில் உள்ள பெண் போட்டியாளர்களிடம் கூட தோளின் மீது கைபோடுவது, கையை பிடித்து இழுப்பது போன்ற விஷியங்களை அவர்கள் செய்யும் போது அவை எனக்கு அசௌகரியமாக இருக்கும். அந்த நேரம் எனக்கு அவர்கள் மீது கடுமையான கோபம் வந்திருகிறது.பொதுவாக பெரிய நடிகர்களிடம் நாம் புகைப்படம் எடுத்துக்கொள்கிறோம் என்று கேட்டால் புகைப்படம் எடுக்கும் போது கூட கொஞ்சம் தள்ளி நமக்கு மரியாதை கொடுத்து நிற்பார்கள்.

-விளம்பரம்-

அப்படி பெரிய நடிகர்கள் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும் போது இவர்கள் “நான் தான் இங்கு பிரபலமானவர் என்று “என் மீது கைபோடுவது, கையை பிடித்து இழுப்பது போன்ற அநாகரிகமான விஷியங்களை செய்யும் போது எனக்கு அப்படி எரிச்சலாக இருக்கும். இப்படி அநாகரிகமாக என்னிடம் நடந்து கொண்டால் “தள்ளி போய்ட்டு அடிச்சுருவா” என்று கூறிவிடுவேன். அதனை ஒரு முறை நிகழ்ச்சியின் போது கூறியும் இருக்கிறேன் என்று பேசி இருந்தார்.

இப்படி இருக்க ஜாக்லினின் இந்த பேட்டியை அந்த யூடுயூப் சேனல் ‘மேல கை போடுவாங்க ஒரு மாதிரி இருக்கும்’ என்று தலைப்புடன் ரக்ஷன் மற்றும் ஜாக்லின் நடனமாடிய புகைப்படம் ஒன்றை Blur செய்து Thumbnailஆகவும் வைத்து இருந்தது. இதனால் கடுப்பான ஜாக்லின் ”

Advertisement