விஜய்யை தொடர்ந்து அனிருத் இசையில் பாடகராக அறிமுகமாகும் அஜித் ? என்னங்க சொல்றீங்க ?

0
1768
Ajith
- Advertisement -

விஜய்யை தொடர்ந்து அனிருத் இசையில் அஜித் பாடதராக அறிமுகமாக இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்தை எடுத்து இருக்கிறார்கள். இந்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது.

- Advertisement -

துணிவு படம்:

இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தை ரெட் ஜெயின்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. இப்படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்து விட்டது என்று கூட கூறியிருந்தனர். இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது.

ஏகே 62 படம்:

பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் பின் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியானது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். மேலும், நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தினுடைய டைட்டில் போஸ்ட்டர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு விடா முயற்சி என்று பெயரிடப்படுகிறது. அஜித்தின் திரைப்பட வரிசையில் V என்ற வார்த்தை துவங்கும் டைட்டிலில் இது 10வது முறை.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் இந்த போஸ்டரில் விடாமுயற்சி என்ற தலைப்பில் ற் எழுத்துக்கு மேல் மேப்பில் உள்ள அடையாளக் குறி இருக்கிறது. இதனால் இந்த படம் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அனிரூத் இசையில் அஜித் பாட இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி, விக்ரம், சூர்யா என பல நடிகர்கள் தங்களுடைய சொந்த குரலில் பாடல்களை பாடி இருக்கிறார்கள்.

அஜித் பாடும் பாடலா :

ஆனால், அஜித் இதுவரை எந்த படத்திலும் பாடவில்லை. தற்போது முதல் முறையாக விடா முயற்சி படத்தில் அஜித் பாட இருக்கிறார். இந்தப் இந்தப் பாடல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே துணிவு படத்திலேயும் அஜித்தை பாட வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஜிப்ரான் கூறியிருந்தது, துணிவு படத்தின் ஜங்ஸ்டா பாடலின் இடையில் வரும் ரப் பாடலில் அவரை பேச வைப்பதுக்காக முயற்சி செய்தோம். ஆனால், பாடல் தொழில்நுட்ப உருவாக்கத்திற்கு நேரம் போதுமானதாக இருந்ததால் அதைத் தொடர்ந்து நோ கேட்ஸ் என்ற வசனத்தை பாடலில் பயன்படுத்தினோம் என்று கூறியிருந்தார்.

Advertisement