தமிழ் ரசிங்கர்களுக்கு பரிட்சயமான தொகுப்பாளர்களுள் ரம்யாவும் ஒருவர். டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா. மேலும், இவர் மக்கள் அறிந்த ஒரு பிரபல தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ரம்யாவும் அப்ரஜீத் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. ஆனால், இவர்களது திருமணம் முழுமையாக ஓராண்டு கூட நீடிக்கவில்லை என்பது தான் சோகமான விஷயம்.
ரம்யா மற்றும் அப்ரஜித் திருமணம் நடைபெற்ற சில மாதங்களுக்கு பின்பு தனிப்பட்ட பிரச்சனை காரணத்தால் தனது கணவரை பிரிந்து வந்து விட்டார். மேலும், ரம்யா, திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து தொகுப்பாளினியாக வேலை செய்வேன் என்று கூறியதால் தான் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக அப்போது கூறப்பட்டது. ஆனால், உண்மையான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. பின்னர் விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பினார் ரம்யா.
விவாகரத்துக்கு பின்னர் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்த ரம்யா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரம்யா இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போவதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரம்யாவிடம், உங்களுக்கு கருப்பான பையன் வேண்டுமா அல்லது வெள்ளையான பையன் வேண்டுமா என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
இதற்கு பதில் அளித்த ரம்யா, , தனக்கு நிறம் ஒரு தடை இல்லை எனவும், நல்ல மனிதராக இருந்தால் போதும் என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் இரண்டாம் திருமணத்திற்கு ரம்யா பச்சை கொடி காண்பித்து விட்டாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இரண்டாம் திருமணம் செய்து கொள்வது குறித்து ரம்யா கூறினால் மட்டுமே இதற்கு பதில் கிடைக்கும். தற்போது ரம்யா, விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.