போயா வெளியனு சொல்லிட்டாரு – வாய்ப்பு தேடி சென்றுள்ள விஜய் டிவி சீரியல் நடிகரை அவமானபடுத்தியுள்ள கொம்பன் இயக்குனர்.

0
1283
gemini

நடிகர் ஜெமினி தமிழில் வெளியான குள்ளநரி கூட்டம் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல், ஆபிஸ் போன்ற சீரியல்களில் கூட நடித்திருக்கிறார். மேலும் ஈரமான ரோஜாவே சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜெமினி. இந்த நிலையில் இவரை வாய்ப்பு கேட்டு சென்ற போது பிரபல இயக்குனரான முத்தையா இவரை அவமானபடுத்தியதாக கூறியுள்ளார்.

வீடியோவில் 22:30 நிமிடத்தில் பார்க்கவும்

தமிழில் பிரபல இயக்குனரான முத்தையா சென்டிமென்ட் படங்களை எடுப்பதில் வல்லவர். இவர் தமிழில் குட்டிப் புலி வருது தேவராட்டம் கொம்பன் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார் மேலும் நடிகர் ஜெமினிக்கு, முத்தையா படத்தில் நடிக்க மிகவும் ஆசையாக இருந்ததாம். பாயும்புலி பட இசை வெளியீட்டு விழாவின் போது நான் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் சாரிடம் மருது படத்தில் நான் நடிக்க ஆசைப்பட்டேன் என்று கூறியிருந்தேன். மேலும் வேல்ராஜ் சார் , முத்தையா அலுவலத்திற்கு செல்லுமாறு சிபாரிசு செய்தார்.

- Advertisement -

மேலும் அவர் என்னை சந்தித்தால் சண்டியர் படத்தில் நீ நடித்ததை வைத்து உன்னை அடையாளம் கண்டு கொள்வார் என்று கூறினார். நானும் நம்பிக்கையோடு முத்தையா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று சென்றிருந்தேன். அவருடைய அலுவலகத்துக்கு சென்றபோது முத்தையா சார் சாப்பாட்டிற்கு சென்றிருக்கிறார் என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். இதனால் அங்கிருந்த ஒரு அசிஸ்டன்ட் டைரக்டரை அழைத்து என்னுடைய புகைப்படத்தை கொடுத்துவிட்டு வெளியில் வந்துவிட்டேன்.

முத்தையா சந்திக்கவில்லை என்று நினைத்து சோகத்தோடு வெளியே வந்தபோது, அவர் சாப்பிட்டுவிட்டு என்னுடைய எதிரில் வந்தார். உடனே எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று சந்தோஷமாக இருந்தது. அவரை சந்தித்தோம் நான் அவருடன் பேசியபோது ‘ஹலோ போட்டோ கொடுத்தாயா போயிட்டே இருக்கணும் பார்க்கிற இடத்தில் எல்லாம் பேசிட்டு இருக்க கூடாது போயா வெளியே’ என்று சொல்லிவிட்டார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது நான் என்ன தவறு செய்தேன் என்று பின்னர் தான் தெரிந்தது சினிமா இண்டஸ்ட்ரியை பொருத்த வரை இதுபோன்ற சிபாரிசுக்கு மதிப்பே கிடையாது. அது எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி என்று அப்போது நினைத்தேன் என்று கூறியிருக்கிறார் ஜெமினி.

-விளம்பரம்-
Advertisement