இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. மேலும், தனுஷ், அமலா பால், சரண்யா மோகன், சமுத்திரகனி என்று பலர் நடித்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த திரைப்படம் அந்த ஆண்டின் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த திரைப்படம் ப்ரொடக்ஷன் செலவையும் சேர்த்து வெறும் 6 கோடி பட்ஜட்டில் உருவானது.
ஆனால், இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தினை தனுஷ்ஷின் மனைவியான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி 2017 ஆம் ஆண்டு வெளியானது. இந்த இரண்டு படத்திலும் தனுஷ்ஷின் தம்பி கதாபாத்திரத்தில் ரிஷிகேஷ் என்பவர் நடித்திருந்தார்.ஆனால், அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது வேறு யாரும் இல்லை விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு சீரியலில் நடித்த விக்னேஷ் கார்த்திக் தானாம்.
இதையும் பாருங்க : சினிமாவே வேண்டாம் என்று தலை முழுகி, வெளிநாட்டில் மெக்கானிக் வேலை – அப்பாஸின் மகள் மற்றும் மகனின் லேட்டஸ்ட் புகைப்படம்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ஒரு முறை சிவகார்த்திகேயன்கிட்ட இருந்து போன் வந்திருந்தது. நடிக்கற ஆர்வம் இருக்கா?’என்று கேட்டார். என்ன ப்ரோ இப்படி கேட்டுட்டீங்க? நிச்சயம் பண்ணலாம்’ என்று சொன்னேன். அப்போ , `விஐபி’ படத்துல தனுஷ் சாரோட தம்பி கேரக்டருக்காகக் கேட்டிருந்தாங்க. உடனே சாயங்காலம் ஆடிஷனுக்கு ஆபீஸுக்கு கிளம்பி வரச் சொன்னாங்க.
அப்போது நான் ஒரு ஷோவுல கமிட்டாகியிருந்தேன். அந்த ஸோ, வெளி ஊர்ல இருந்து என்னால கிளம்பிப் போகமுடியவில்லை. அடுத்த நாள் போன் பண்ணேன். அப்ப வேற ஒருத்தர் அதுக்கு கமிட்டாகிட்டார்னு சொன்னாங்க. எப்போ விஐபி படம் பார்த்தாலும் அந்தப் படத்தை மிஸ் பண்ணிட்டோம்னு வருத்தப்படுவேன் என்று கூறியுள்ளார். தற்போது விக்னேஷ் கார்த்திக், ஐஸ்வர்யா ராஜேஷ்ஷை வைத்து ‘திட்டம் இரண்டு’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.