காசு கொடுத்தால் தான் என் அண்ணன் பிணத்தை கொடுப்பேன் என்று சொன்னார்கள் – சீரியல் நடிகை ஜனனி வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ.

0
4954
janani

சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் இருவரின் மரணம் தமிழகத்தையே புரட்டி போட்டு வருகிறது. காவல்துறையினர் தாக்கியதில் தந்தை, மகன் இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டு அநியாயமாக உயிர் இழந்து உள்ளார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கொழுந்து விட்டு எரிகிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு நியாயம் கேட்டு நாடு முழுவதும் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், நடிகர், நடிகைகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

janani

மேலும், இவர்கள் இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பல்வேறு வலியுறுத்தல் எழுந்து வருகின்றது. அதே போல கடந்த சில நாட்களாகவே #JusticeForJayarajandBennicks என்ற ஹேஷ் டேக்கும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சீரியல் நடிகை ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷாக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதில், நான் பொதுவாக டிவி பார்ப்பது கிடையாது ஆனால் இன்று காலை தான் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் வந்தேன் இந்த சம்பவத்தை பார்க்கும்போது எனக்கு அறியாமலேயே அழுகைதான் வந்தது ஒரு மிருகம் தான் இன்னொரு மிருகத்தை வேட்டையாடும் அதுகூட பசித்தால் தான் இன்னொரு மிருகத்தை வேட்டையாடும்.ஆனால், ஒரு மனிதனாக இருந்து இன்னொரு மனிதனை கொல்ல எப்படி இவர்களுக்கு மனம் வருகிறது நான் இவ்வளவு அழுவதற்கு காரணம் இதே போன்ற சம்பவம் என்னுடைய வாழ்விலும் நடந்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு இதே போல தான் என்னுடைய அண்ணனையும் எழுந்தேன் அதிலிருந்து தான் எனக்கு போலீசை பிடிக்காமல் போனது என்னுடைய அண்ணன் முறை கூட பணம் கொடுத்தால் தான் கொடுப்பேன் என்று சொன்னார்கள். அப்போது நான் மிகவும் சின்ன பெண்ணாக இருந்தேன் எனக்கு என்ன செய்வது என்று கூட தெரியாது இது போன்ற சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது இதற்காக நாம் குரல் கொடுக்க வேண்டும் என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்திருக்கிறார் ஜனனி.

-விளம்பரம்-
Advertisement