திருமண வீடியோவை வெளியிட்ட வனிதா. பிக் பாஸ் பிரபலங்கள் மிஸ்ஸிங். ஆனால், இந்த நடிகை மட்டும் தான் போயிருக்காங்க.

0
21839
vanitha
- Advertisement -

பிக் பாஸ் வனிதாவுக்கும் பீட்டர் பவுல் என்பவருக்கும் இன்று (ஜூன் 27) வீட்டிலேயே மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்று உள்ளது. பிரபல ஸ்டார் தம்பதிகளாக விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான வனிதா,இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் இவர் நடித்தாலும் இவருக்கும் மிகப்பெரிய புகழ் கிடைத்தது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக வனிதாவின் குடும்ப பிரச்சனை அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான், மேலும், வனிதாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி அது இரண்டுமே விவாகரத்தில் முடிந்துவிட்டது. மேலும் இவருக்கு இரண்டுபெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். ஆனால், இவரது மகன் மட்டும் இவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

- Advertisement -

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் கிறிஸ்துவ முறையில் நடைபெற்றுள்ளது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்குபெற்ற வனிதாவின் திருமண புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் தனது திருமண வீடீயோவை வனிதா தனது யூடுயூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.மேலும், இவரது திருமணத்தில் நடிகைகளில் அம்பிகா மட்டும் கலந்து கொண்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க வனிதா திருமணம் செய்துகொண்டுள்ள பீட்டர் பவுலலின் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதில் அவர் பீட்டருடன் திருமணமாகி தமக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் முறையாக விவாகரத்து அளிக்காமல் வனிதாவை திருமணம் செய்ததாக புகார் தெரிவித்தார். பீட்டர் பாலும், அவரது மனைவி எலிசபெத்தும் கருத்து வேறுபாடு காரணமாக 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள் என்று தெரிகிறது. இந்த நிலையில் வனிதாவை பீட்டர் திருமணம் செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement