தங்கள் மகனின் பெயரை குயூட் புகைப்படத்தோடு அறிவித்த அன்வர் – சமீரா ஜோடி.

0
7553
sameera
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் ஒரு சில சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பாகத் தொடங்கிய `பகல் நிலவு’ சீரியல் இளசுகள் மத்தியில் படு பிரபலமடைந்தது. இந்த தொடரில் நடித்த அன்வர் சமீரா ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார்கள். 700-வது எபிசோடை நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையில், கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த தொடரில் இருந்து அன்வர் மற்றும் சமீரா ஜோடி வெளியேறினார்.

-விளம்பரம்-

விக்னேஷ் கார்த்திக் – சௌந்தர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் குறைந்ததாகவும், அன்வர் கதையில் குறுக்கிட்டு டாமினேட் செய்ததே அதற்குக் காரணம் என்றும் பேசப்பட்டது. அதன் பின்னர் கார்த்திக் மற்றும் சௌந்தர்யா ஜோடியும் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார்கள். அன்வர்– சமீரா அவர்கள் நவம்பர் 11ஆம் தேதி மாலை பௌர்ணமி நிலவில் இருவரும் மணம் முடித்து தங்களுடைய வாழ்க்கையை தொடங்கினார்கள்.

இதையும் பாருங்க : நல்லவங்க வேஷம் போடாதீங்க ‘ – துவங்கியது இந்த சீஸனின் முதல் நாமினேஷன். உங்கள் கணிப்பு யார் யார் ?

- Advertisement -

மேலும்,ஹைதராபாத்தில் உள்ள சமீரா வீட்டில் பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் முறைப்படி மிக எளிமையாக இவர்களுடைய திருமணம் நடந்தது.ரியல் காதலர்களாக இருந்த அன்வர்– சமீரா பகல் நிலவு சீரியலில் காதலர்களாக நடித்ததால் அந்த சீரியல் செம ஹிட். பகல் நிலவு சீரியலுக்கு பின் சமீரா, ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘றெக்க கட்டி பறக்குது மனசு’ என்ற தொடரை தயாரித்து அதில் ஹீரோயினியாகவும் நடித்து இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் இவர்களுக்கு கடந்த 4 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை சமீராவின் கணவர் அன்வர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் தங்கள் மகனுக்கு Syed Arhaan என்று பெயர் வைத்துள்ளதாக, தன் மகனுடன் எடுத்த குயூட் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் அன்வர்.

-விளம்பரம்-
Advertisement