‘பெப்சி தொழிலாளர்களை அஜித் புறக்கணிக்கார், ஆனால் விஜய் ‘ – வெளுத்து வாங்கிய ஆர்.கே.செல்வமணி

0
350
selvamani
- Advertisement -

நடிகர் அஜித் பெப்சி தொழிலாளர்களை புறக்கணிக்கிறார் என்று ஆர்கே செல்வமணி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் அஜித்தின் வலிமை படம் வசூலில் 300 கோடியை நெருங்கி சென்று இருந்ததாக தயாரிப்பாளரே அறிவித்து இருந்தார். தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறது. இந்த படத்தில் படத்தில் ஹீரோயினாக தபு கமிட் செய்திருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

விக்னேஷ் சிவன்- அஜித் கூட்டணி:

அதோடு இந்த படத்தின் சூட்டிங்கை ஜூலை மாதத்திற்குள் முடிக்க இருப்பதால் படக்குழு மும்முரமாக செயல்பட்டு வருகின்றது. படத்தில் பிற நடிகர் மற்றும் நடிகை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். சமீபத்தில் தான் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. லைகா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் படத்தை அமைக்கிறார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்-விஜய் படப்பிடிப்பு குறித்த தகவல்:

இப்படி அஜித் நடிப்பில் வெளிவந்த மற்றும் உருவாகும் படங்களின் படப்பிடிப்பு முக்கால்வாசி ஹைதராபாத்தில் தான் நடக்கிறது. இது குறித்து பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதேபோல் விஜய்யின் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளி ஆகி இருந்தது. ஆனால், விஜய் அவர்கள் பெப்சி தொழிலாளர்களை கருத்தில் கொண்டு தளபதி 66 படத்தின் முக்கால்வாசி படபிடிப்பை சென்னையில் தான் எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் கேட்டு இருந்தார். அதற்கு தயரிப்பாளரும் ஓகே சொல்லி சென்னையில் படப்பிடிப்பை நடத்தினார்.

-விளம்பரம்-

இயக்குனர் ஆர்கே செல்வமணி அளித்த பேட்டி:

ஆனால், நடிகர் அஜித் மட்டும் தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இது குறித்து பெப்ஸி தலைவரும், இயக்குனருமான ஆர்கே செல்வமணி கண்டனம் தெரிவித்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பது, நடிகர் அஜித்திற்கு எங்களது கோரிக்கை உங்களுடைய படப்பிடிப்பை இங்கேயே வைக்க வேண்டும் என்பது தான். ஹைதராபாத்தில் நடத்தினால் பல தொழிலாளர்கள் உங்களால் பாதிக்கப்படுகிறார்கள். எங்களுக்கும் சண்டை போட தெரியும். ஆனால், 5-6 வருஷமாக பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் இருக்கிறோம்.

அஜித்திற்கு வைத்த வேண்டுகோள்:

நடிகர் அஜித்குமாருக்கு எங்கள் வேண்டுகோளே, ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்துவதால் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் அஜித்குமார் படப்பிடிப்பை தமிழகத்தில் நடத்த வேண்டும். போனிகபூர் போன்றவர்களுக்கும் எங்களுடைய வேண்டுகோள் இது தான் என்று கூறியிருக்கிறார். இப்படி இயக்குனர் செல்வகுமார் அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை அடுத்து அஜித் குமார் தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் படப்பிடிப்பை சென்னையில் நடத்துவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement