காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் மேடை காமெடியனாக தனது பயணத்தை ஆரம்பித்து தனது கடின உழைப்பின் மூலம் தற்போது சினிமாவில் காமெடியனாக கலக்கிவருகிறார். . ரோபோ ஷங்கர் மகளான இந்திரஜா பிகில் படத்திற்கு முன்பாக டிக் டாக் செயலியில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவை பார்த்த அட்லி இவரது நடிப்பை கண்டு வியந்து போய் பின்னர் இவருக்கு பிகில் படத்தின் வாய்ப்பினை கொடுத்தார். ரோபோ ஷங்கர் தனது சமூக வலைதளத்தில் பதிவிடும் பெரும்பாலான புகைப்படத்தில் இரண்டு மகள்கள் இருப்பார்கள். அதில் இந்திராஜாவை பற்றி தான் பலருக்கும் தெரியும். ஆனால், இன்னொரு பெண்ணை பலரும் ரோபோ சங்கரின் இன்னொரு மகள் என்றுதான் இது நல்ல வரை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் இவர் ரோபோ சங்கரின் அண்ணன் மகள் என்பது பலரும் அறிந்தராத விஷயம். ரோபோ ஷங்கருக்கு சிவராமன் என்ற ஒரு அண்ணன் இருக்கிறார். அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார். அந்த மகள் தான் இந்த இந்து. ரோபோ ஷங்கர் வீட்டில் நாடாகும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் இவர் கட்டாயம் இருப்பார். தன்னுடைய சித்தப்பா ரோபோ சங்கர் மற்றும் சித்தி பிரியங்கா குறித்து உருக்கமான வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்
அதில் அவர் பேசியுள்ளதாவது இவங்களோடு இருக்கிற தருணத்தை தான் என்னுடைய வாழ்க்கையில் ஃப்ரீ பட்டன் இருந்தால் ஃப்ரீ செய்வேன். எங்க அப்பாவை விட்டுவிட்டு கூட நான் இருந்து விடுவேன். ஆனால், என்னுடைய சித்தப்பாவை விட்டுவிட்டு என்னாலையும் இருக்க முடியாது அவராலும் இருக்க முடியாது. அவர் வீட்டில் இருக்கும் போது கண்டிப்பாக நான்அவருடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்.
உண்மைய சொல்லப்போனால் வெளியிலிருந்து பார்த்தால் எனக்கே எங்களுடைய உறவை கண்டு பொறாமை வரும். என்னுடைய நண்பர்கள் கூட சொல்வார்கள் உன் அப்பா கூட இல்லை உனக்கு சித்தப்பாதான் அதுவும் அவர் ஒரு செலிபிரிட்டி, அப்படி இருந்தும் எப்படி இவ்வளவு க்ளோசாக இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள். ஆனால், பழக பழக அவர்களுக்கும் புரிந்து விட்டது என் சித்தப்பாவிற்கு நான் எவ்வளவு ஸ்பெஷல் என்று.
நான் காலேஜ் முடித்ததில் இருந்து இப்போது வரை 8 வருடமாக சித்தப்பா வீட்டில் தான் இருக்கிறேன். அவரை சித்தப்பா என்று சொல்வதை விட அப்பா என்று தான் சொல்ல வேண்டும், அவ்வளவு பாசமாக என்னை பார்த்துக் கொள்வார்கள். அதுவும் என்னுடைய சித்தி என்னை ஒரு அம்மா மாதிரி பார்த்துக் கொள்வார். எனக்கு ‘இது என் வீடு டா’ என்ற எண்ணத்தை தான் எப்போதும் எனக்கு கொடுத்திருக்கிறார்கள் என்று உருக்கமுடன் பேசி இருக்கிறார்.
சமீபத்தில் கூட நடிகர் ரோபோ சங்கரின் புகைப்படம் ஒன்று பெரும் வயதானது அதில் அவரது உடல் மிகவும் மெலிந்திருப்பதை கண்டு ரசிகர்கள் வரும் அவருக்கு என்ன ஆனது என்று வருத்தப்பட்டனர். இது குறித்து இந்து பேட்டி அளித்த போது ஒரு நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றபோது அவருக்கு லேசான மஞ்சள் காமாலை இருந்தது. இதனால் அவர் பார்ப்பதற்கு டயர்டாக இருப்பதுபோல் இருக்கிறது. மற்றபடி அவருக்கு உடல் நலக்குறைவு எல்லாம் இல்லை. அவர் ஆரோக்கியமாகவே இருக்கிறார்.அதேபோல தனக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் வாய்ப்புக்காகவும் காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் ரோபோ சங்கர் அண்ணன் மகள் என்று வாய்ப்பு கேட்க தனக்கு விருப்பமில்லை என்றும் கூறியிருக்கிறார்.