வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி ரஜினி சொன்னதா ? – வீடியோவை போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்.

0
456
- Advertisement -

வரும் பொங்கலுக்கு தமிழ் மக்களுக்கு வாரிசு, துணிவு என்ற இரண்டு பொங்கல் பரிசுகள் கிடைக்கும் நிலையில் நேற்று விஜய் நடித்திருக்கும் வாரிசு படத்தை ப்ரோமோஷன் செய்யும் வகையில் படக்குழு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அந்த வகையில் நேற்று வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 5 ஆயிரம் ரசிகர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நடிகை விஜய்யை காணவும் குறிப்பாக அவரின் குட்டி ஸ்டோரியை காணவும் அவரது ரசிகர்கள் பலரும் ஆவலாக இருந்தனர்.

-விளம்பரம்-

இப்படி பட்ட நிலையில் விஜய்யின் குட்டி ஸ்டோரியை காண அவரின் ரசிகர்கள் பலர் மிகவும் ஆவலாக நேரு உள்அங்கத்தில் காத்துக்கொண்டிருந்தனர். மேலும் இந்த விழாவில் ரஷ்மிக மந்த, பிரகாஷ் ராஜ், குஷ்பு, சரத்குமார், யோகிபாபு, என பல நடிகர்களும் வாரிசு படக்குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் மற்ற எல்லா விஜய் பட இசை வெளியிட்டு விழாவில் கூறுவதை போலவே இந்த ஆடியோ வெளியிட்டு விழாவிலும் நடிகர் விஜய் கூறிய குட்டி ஸ்டோரி சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

அவர் சொன்னது `ஒரு வீட்டுல அப்பா ,அம்மா, தங்கச்சி, அண்ணன் இருந்தாங்க. அப்பா வேலை விட்டு வீட்டுக்கு வரும் போது எப்போதுமே குழந்தைகளுக்கு இரண்டு சாக்கலேட் வாங்கிட்டு வருவார். அந்த சாக்கலேட்டை தங்கச்சி உடனடியா சாப்பிட்டு விடுவார். அதற்காகவே அண்ணன் அந்த சாக்லேட்டுகளை மறைத்து வைப்பர். ஒருமுறை தங்கச்சி தன்னுடைய அண்ணனிடம் வந்து “அன்பு” என்றால் என்ன என்று கேட்க. அண்ணன் நீ எடுப்பாய் என்று தெரிந்தும் அதே இடத்தில சாக்லெட்டை வைக்கிறேனே அது தான் “அன்பு” என்று கூறியுள்ளார்.

அதை போலத்தான் என்னுடைய ரசிகர்களின் அன்புதான் என்னுடைய போதை, உலகின் மிகப்பெரிய ஆயுதம் அன்புதான் என்று கூறினார். மேலும் 1990களில் இருந்து எனக்கு ஒரு போட்டியாளர் இருக்கிறார் அவரை நான் முந்தவே நான் வேகமாக ஓடுகிறேன். அவர் தான் என்னுடைய போட்டியாளர், அவர்பெயர் ஜோசப் விஜய் என்றும் எனக்கு நான்தான் போட்டியாளர் என்றும் கூறினார் தளபதி. விஜய் கூறிய இந்த குட்டி ஸ்டோரி வைரலாகவே இதனை ஏற்கனவே ரஜினி சொல்லோவிட்டார் என்று நெட்டிசங்கள் பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

அதாவது ரஜினி நடித்திருந்த வெற்றித்திரைப்படமான படையப்பா குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது எனக்கு எதிரியும் வில்லனும் நான் தான். நான் யாரையும் போட்டியாளராக என்னவில்லை. என்னுடைய ஒரு படம் ஹிட் அடித்தால் அடுத்து வரும் படத்தை இதனைவிட ஹிட் அடிக்க வேண்டும் என்றுதான் இன்று வரையில் இருந்து வருகிறேன். எனக்கு நான் தான் போட்டியாளர் என்று ரஜினி கூறியதை, விஜய் கூறியதுடன் ஒன்றாக பகிர்ந்து `இதுவும் காப்பியா என்று கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement