1970 ஆம் ஆண்டு எனது தந்தை வெறும் கனவுகளுடன் சென்னை வந்தார் – விஜய் வசந்த் உருக்கம்.

0
3548
vijayvasanth
- Advertisement -

வசந்த் அண்ட் கோ, வசந்த் தொலைக்காட்சின் நிறுவனரும் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பியுமான வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தி.நகரில் உள்ள வசந்த குமாரின் மறைவிற்கு பின்னர் அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அவரது நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் 10 மணி அளவில் அவரது உடல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. பின்னர் நேரமின்மை காரணமாக கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம், குமரி அனந்தன் தெருவில் உள்ள வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

- Advertisement -

அதன் பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அவரது சொந்த நிலத்தில் அவரது அப்பா அம்மா புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே புதைக்கப்பட்டது. தந்தையின் மரணம் குறித்து பத்திரிகையாளர்களை கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28 )சந்தித்த விஜய் வசந்த அப்பா இன்று (28.08.2020) 6.56 மணிக்கு இயற்கை எய்தினார். கொரோனா டெஸ்ட் எடுத்து பின்னர் அவர் சிகிச்சை எடுத்து கொண்டிருந்தார். அதன் பின்னர் அப்பாவிற்கு வெண்டிலேட்டர் வைக்கக்கூடிய சூழ்நிலை வந்தது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்ட நிலையில் தான் அப்பா காலமானார் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தந்தையின் இறப்பிற்கு பின்னர் முதன் முறையாக ட்வீட் செய்துள்ள விஜய் வசந்த், 1970 ஆம் ஆண்டு எனது தந்தை வெறும் கனவுகளுடன் சென்னை வந்தார். 50ஆண்டுகளுக்கு பின் தன் கனவுகளை எல்லாம் நிஐமாக்கிய ஒ௫ உன்னத மனிதராக அவரை அவரின் சொந்த ஊ௫க்கு கொண்டு வந்து சேர்த்தேன். தாங்கள் என் தந்தையை நினைவு கூர்ந்ததர்க்கு நன்றி மிஸ்யூடேட் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement