ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்த #14YearsOfSivajiTheBoss – ரஜினி முதலில் சிபாரிசு செய்தது இந்த காமெடி நடிகரையும், இந்த இந்தி ஹீரோயினியையும் தான்.

0
3587
sivaji
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே வேற லெவல்ல தூள் கிளப்பும். அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிவாஜி தி பாஸ் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. இந்த படத்தை ஏவிஎம் புரோடக்சன் தயாரித்தார்கள். இந்த படத்தில் ரஜினியுடன், ஸ்ரேயா, மணிவண்ணன், விவேக், சுமன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று தந்தது.

-விளம்பரம்-
Rajinikanth | Aishwarya Rai Bachchan | Unseen Pics | Rajinikanth Aishwarya  Robot | Endhiran - Filmibeat

இந்த படம் வெளியாகி இன்றோடு (ஜூன் 15) 14 வருடங்கள் ஆகியுள்ளது. இதை தொடர்ந்து ட்விட்டரில் 14YearsOfSivajiTheBoss என்ற ஹேஷ் டேக்கும் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகை ஸ்ரேயா அவர்கள் கதாநாயகியாக நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரத்தில் முதலில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக இருந்தது. இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சந்திரமுகி படத்தின் போது நிகழ்ந்த நிகழ்சியில் கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : 10 ஆம் வகுப்பு தேர்வில் டாப் 3யில் வந்துள்ள பாலா – பள்ளியே வைத்துள்ள பேனர். எவ்ளோ மார்க் வாங்கி இருக்கார் பாருங்க.

- Advertisement -

அதில் அவர் கூறியது, முதலில் இந்த படத்தில் நடிக்க தயாரிப்பாளர்கள் என்னிடம் கேட்டார்கள். நான் முதலில் வடிவேலுவிடம் போய் கேளுங்கள் என்று சொன்னேன். ஏனெனில் அப்போது அவர் பிசியான நடிகராக திகழ்ந்தவர். பிறகு நான் ஐஸ்வர்யா ராயிடம் கேளுங்கள் என்று சொன்னேன்.ஏன்னா, என்னுடைய ஒவ்வொரு படத்திலும் அவருடைய பெயர் வந்து கொண்டிருக்கும். முதலில் படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபத்திரத்தில் நடிக்க அவரிடம் கேட்டோம்.

This image has an empty alt attribute; its file name is 2-3.jpg

அதற்கு பிறகு அவரிடம் பாபா படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டோம். ஆனால், அவர் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமில்லை என்று சொன்னார். அதற்கு பிறகு அவரிடம் நாங்கள் சந்திரமுகி படத்தில் ஜோதிகா கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டோம். அதுவும் சில காரணங்கள் நின்று போனது. பிறகு சிவாஜி படத்தில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அந்தப் படத்தில் கூட அவரால் நடிக்க முடியாமல் போனது. கடைசியில் அவருடன் எந்திரன் படத்தில் தான் நடிக்க முடிந்தது என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement