இவங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் டைட்டில் வாங்குனா நல்லா இருக்கும் – வெளியில் வந்தும் திருந்ததா விக்ரம்.

0
175
- Advertisement -

தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 89 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

கடந்த வாரம் சரவணன் விக்ரம் குறைந்த வாக்குகளை பற்றி வெளியேறி இருந்தார். இவர் நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து தற்போது வரை பெரிதாக எந்த ஒரு விஷயத்திலுமே ஈடுபாடுடன் செய்யவில்லை. மற்ற போட்டியாளர்கள் சண்டை போட்டாலும் அதை கண்டு கொள்ளவும் இல்லை, தலையிடுவதும் இல்லை. அதோடு அடிக்கடி இவர், தன்னைத்தானே டைட்டில் வின்னர் என்றும் சொல்லிக் கொண்டிருந்ததெல்லாம் ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்றி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் இவர் வெளியேறியது சரிதான் என்று பலருமே கூறி வருகிறார்கள்.

- Advertisement -

சரவண விக்ரம் பேட்டி:

இதனை அடுத்து முதல் முறையாக சரவண விக்ரம் லைவ் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், உள்ளே இருந்து பார்த்தால் விஷ்ணு, தினேஷ், அர்ச்சனா மூன்று பேர் உண்மையானவர்கள் கிடையாது. ஆனால், அதில் அர்ச்சனாவிடம் மட்டும் எனக்கு நல்ல நட்பு கிடைத்தது. அதுக்குள்ளே நான் வெளியே வந்து விட்டேன். உள்ளே இருந்தபோது நான் ஒரு குரூப்பை நம்பி ஏமாந்து விட்டேன். அவர்கள் குறித்து சரியான புரிதல் எனக்கு இல்லை. அவர்களைப் பற்றி நான் பேசக்கூடாது. அவர்கள் வெளியே வந்த பின்னர் தெளிவு படுத்திக் கொண்டு அவர்களை குறித்து பேசுகிறேன்.

போட்டியாளர்கள் குறித்து சொன்னது:

மேலும், பிக் பாஸை பொறுத்தவரை விஜய் வர்மா, விசித்திரா இருவருமே ரொம்ப பலமான போட்டியாளர்கள். இதில் விஜய், தினேஷ், அர்ச்சனா, மணி ஆகியோர் கடைசி வரை வருவார்கள். மாயா, பூர்ணிமா, நிக்சன் இவர்கள் மூவரில் இருந்து ஒருவர் கண்டிப்பாக முதல் ஐந்து இடங்களை பிடிப்பார்கள். அதோடு நிகழ்ச்சியில் நான் இரவு நேரத்தில் பேசிய விஷயங்கள் எல்லாம் தொலைக்காட்சியில் வராது என்று நினைத்து பேசினேன். ஹரிஷ் கல்யாண் வந்து சென்ற பிறகுதான் அதெல்லாம் வெளியில் வருவதை நான் தெரிந்து கொண்டேன். அதுவே ட்ரோலாக மாறிக்கொண்டிருப்பது எனக்கு புரிய வந்தது.

-விளம்பரம்-

டைட்டில் வின்னர் குறித்த விளக்கம்:

நான் எப்போதுமே ஒரு விஷயத்தை மைண்டில் வைத்துக்கொண்டு அதை நோக்கி தான் பயணிப்பேன். அதுபோலதான் டைட்டில் வின்னர் என்ற இலக்கை என் மனதில் வைத்துக் கொண்டு நிகழ்ச்சியில் பயணிக்க ஆரம்பித்தேன். இந்த நிகழ்ச்சி மூலம் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நான் டைட்டில் வின்னர் ஆகாவிட்டாலும் என்னை, டைட்டில் வின்னர் சரவணன் விக்ரம் என்று எல்லோருமே அழைக்கிறார்கள். நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு நான் ஒரு மாலுக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு வந்த ஒருவர், என் கையை தூக்கி உண்மையான டைட்டில் வின்னர் நீங்கள் தான் என்று கூறியிருந்தார்.

நிகழ்ச்சிக்கு பின் சரவணா விக்ரம்:

எனக்கு அதுக்கு பெருமையாக இருந்தது. பிடிக்காதவர்கள், எதிரிகள் என்று எனக்கு யாருமே கிடையாது. டிக்கெட் டூ பினாலேக்கு போகாதது கஷ்டமாக இருந்தது. அதனால் தான் நான் எபிசோடுகளையும் பார்க்க வில்லை. அடுத்து நான் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி கொண்டு இருக்கிறேன். மக்களிடம் எனக்கு பாசிட்டிவான வரவேற்பு கிடைத்திருக்கிறது. நான் அதிகமாக மன உளைச்சலில் இருந்தேன். ஆனால், மக்கள் கொடுத்த அன்பும், ஆதரவும் என்னை மீண்டு வர வைத்திருக்கிறது என்று பேசி இருக்கிறார்.

Advertisement