திருமணம் வரை சென்ற விஜயகாந்த் – ராதிகா காதல். நண்பரால் பிரிந்த காரணம். பிரபலம் சொன்ன சீக்ரெட்

0
3434
- Advertisement -

விஜயகாந்த்- ராதிகா காதல் திருமணம் வரை சென்று நின்று இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே திரை பிரபலங்கள் பலரும் காதல் செய்து இருப்பது வழக்கமான ஒன்று தான். அதில் சிலருடைய காதல் திருமணத்தில் முடிந்து இருக்கிறது. பல பேருடைய காதல் தோல்வியில் முடிந்திருக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபலமான ஜோடிகளாக இருந்த விஜயகாந்த்- ராதிகா காதல் முறிவு குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் இவர் உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். மேலும், விஜயகாந்த்- ராதிகா இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் இருக்கிறது. ஒரு காலத்தில் விஜயகாந்துக்கு பேவரட்டான நடிகை என்றால் ராதிகாவை தான் சொல்லலாம்.

- Advertisement -

விஜயகாந்த்- ராதிகா காதல்:

இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தாலே அந்த படம் கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும். அந்த அளவிற்கு இவர்களுடைய கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருக்கும். இருவரும் இணைந்து நிறைய படங்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இவர்களுடைய உறவு முதலில் நட்பாக தான் ஆரம்பித்தது. அதற்கு பின் காதலாக மாறி திருமணம் வரை சென்றதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் சேர்ந்து தங்களின் திருமண வேலைகளில் கூட ஈடுபட்டிருந்தார்கள்.

செய்யாறு பாலு பேட்டி:

ஆனால், திடீரென்று அவர்களுடைய திருமணம் நடக்காமல் போனது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், விஜயகாந்த் குறித்து நிறைய கிசுகிசுக்கள் செய்தித்தாளில் வந்திருக்கிறது. ஆனால், அதை அவர் கண்டு கொண்டதே இல்லை. அதேபோல் தான் விஜயகாந்த்- ராதிகா குறித்து பல செய்திகள் வந்தது. அது உண்மை தான். விஜயகாந்த்- ராதிகா பிரிவிற்கு விஜய்காந்த் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் தான் காரணம்.

-விளம்பரம்-

விஜயகாந்த்- ராதிகா காதல் முறிவு:

அவர் தான் ராதிகா வேண்டாம் என்று சொல்லிவிட்டார். விஜயகாந்த்- ராதிகா இருவரும் விரும்பியது அனைவருக்குமே தெரியும். ஆனால், இருவருமே சினிமாவில் இருப்பதால் வேண்டாம் என்று ராவுத்தர் சொல்லிவிட்டார். அதோடு ராவுத்தருக்கு விஜயகாந்த்தை முதலமைச்சராக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதுபோல் தான் அவரை அரசியலிலும் இறக்கினார்.

ராவுத்தர் பிரித்த காரணம்:

ராதிகா வந்தாள் அனைத்துமே மாறிவிடும் என்று நினைத்து தான் வேண்டாம் என்று ராவுத்தர் சொல்லி இருக்கிறார். இதனால் ராதிகா ரொம்ப அதிகமாகவே மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். பின் விஜயகாந்த் பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார். பிரேமலதா வந்தவுடன் ராவுத்தரையே தூக்கி வெளியே அனுப்பிவிட்டார் என்று கூறியிருக்கிறார். ராதிகா அவர்கள் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement