கொஞ்சமாவது ரோசம் வேண்டாமா? பூர்ணிமா செறுப்பால் அடிப்பேன் என்று சொன்னதுக்கு விக்ரம் கொடுத்த reaction. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.

0
359
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி 62 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, பிராவோ, அக்ஷ்யா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த வாரம் கொடுத்த மூன்று பூகம்ப டாஸ்கில் இரண்டு டாஸ்கில் போட்டியில் தோற்றதால் இரண்டு வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உறுதியானது. அந்த வகையில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய விஜய் வர்மா மற்றும் அனன்யா wild Card போட்டியாளர்களாக உள்ளே நுழைந்து இருக்கின்றனர்.

- Advertisement -

இந்த வாரம் நிக்ஸன் தலைவரானார். நிக்சனின் கேப்டன்சியில் யாருக்காவது அநீதி நிகழ்ந்து இருக்கும் பட்சத்தில் வீட்டில் வைத்து இருக்கும் மணியை அடிக்கலாம். ஒருவேளை பெரும்பாலனோர் மணி அடிக்கும் பட்சத்தில் நிக்சனின் கேப்டன் பதிவு பறிக்கப்படுவதுடன் அவர் நேரடியாக இந்த வார நாமினேஷனில் இடம்பெறுவார் என்றும் அறிவித்து இருந்தார் பிக் பாஸ். பின் வழக்கம் போல் பிக் பாஸ் வீட்டில் டாஸ்குகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நாமினேட் பட்டியல்:

போட்டியாளர்களும் நன்றாக விளையாடி இருந்தார்கள். இந்த வாரம் விஷ்ணு-அர்ச்சனா இடையே தான் அதிக சண்டை நடந்தது. பின் பிக் பாஸ் வீட்டில் ஓப்பன் நாமினேட் நடைபெற்றிருக்கிறது. அதில் தினேஷ், சரவணன் விக்ரம், ஜோவிகா, மணி, கூல் சுரேஷ், விசித்ரா, பூர்ணிமா, அனன்யா, ஆகியோர் நாமினேட் ஆகியிருக்கிறார்கள். இதில் இந்த வாரம் சரவணன் விக்ரம் தான் வெளியேறுவார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதோடு நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே விக்ரம் எதையும் சுவாரசியமாக செய்யவில்லை. மற்ற போட்டியாளர்கள் சண்டையில் கூட தலையிடவில்லை. இதனால் இவரை ரசிகர்கள் பலரும் விமர்சித்து இருந்தார்கள். மேலும், பிக் பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னர் தான் என்று சரவணன் சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஆனால், இவர் எந்த ஒரு கன்டென்ட் கொடுக்காமல் இருப்பதால் மிக்சர் சாப்பிட தான் லாக்கி என்றெல்லாம் கிண்டல் அடித்திருக்கிறார்கள்.

சரவண விக்ரம்- பூர்ணிமா வீடியோ:

இந்த நிலையில் சரவண விக்ரம்- பூர்ணிமா வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை கிளப்பி இருக்கிறது. அதில், பூர்ணிமா, மாயா, நிக்சன் ஆகியோர் டீசர்ட்களை எடுத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது விக்ரம் அந்த இடத்திற்கு வருகிறார். பூர்ணிமாவிடம் அவர் ஏதோ சொல்கிறார். அதற்கு பூர்ணிமா செருப்பால் அடிப்பேன் என்று சொல்கிறார். இதைக் கேட்டுக் கொண்டு விக்ரம் எதுவும் பேசாமல் திரும்பி திரும்பி பார்த்து செல்கிறார். இதை பார்த்து நெட்டிசன்கள், முதுகுத்தண்டு இல்லாமல் இருப்பதால் தான் எல்லோரும் திட்டுகிறார்கள் என்றெல்லாம் விமர்சித்து கிண்டல் அடித்து வருகிறார்கள்.

Advertisement