வாழவைத்த கேப்டனுக்காக மதுரை திரையரங்க உரிமையாளர் திரையரங்கில் செய்து வரும் விஷயம்.

0
169
- Advertisement -

மதுரையில் கேப்டனுக்கு திரையரஞ்சலி செலுத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜயகாந்தின் இறப்பு செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் கடந்த மாதம் இறுதியில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

-விளம்பரம்-
Vijayakanth

விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை மட்டும் இல்லாமல் தமிழக மக்களையும் அதிகம் பாதித்து இருக்கிறது. மேலும், அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் . பின் விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதோடு பிரபலங்கள் பலர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாததால் அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

- Advertisement -

விஜயகாந்த் மறைவு:

பின் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீட்டில் விஜயகாந்த் உருவப்படத்திற்கு மரியாதை செய்துவிட்டு விஜயகாந்தின் குடும்பத்தாருக்கு பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு அவரைப் பற்றி தெரியாத பல விஷயங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகிய வண்ணம் இருக்கின்றது. மேலும், தமிழகத்தில் பல இடங்களில் கேப்டன் விஜயகாந்தினுடைய புகழ், நிகழ்ச்சிகளும் கூட்டங்களும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

விஜயகாந்த் புகழ்:

அந்த வகையில் விஜயகாந்த் பிறந்து வளர்ந்த மதுரையில் அவருடைய இறப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜயகாந்த் உடன் ஆரம்ப காலத்தில் இருந்தவர்களும் விஜயகாந்த்தால் கை தூக்கி விட்டவர்களும் மதுரையில் அதிகமாக இருக்கின்றார்கள். அவர்கள் எல்லாம் விஜயகாந்த் உடைய புகழை பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் மதுரை நாகமலை புதுக்கோட்டையில் காசி திரையரங்கம் ஒன்று இருக்கிறது. இந்த திரையரங்கில் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தை திரையிட்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மதுரை காசி திரையரங்கம்:

கடந்த ஒரு வாரமாக இலவச டிக்கெட் உடன் இந்த படம் திரையிடப்பட்டு இருக்கிறது. விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இதை திரையரங்கம் செய்திருக்கிறார்கள். விஜயகாந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்த காலக்கட்டலில் அவருடைய படங்கள் எல்லாம் நன்றாக ஓடி திரையரங்கு நடத்துபவர்கள் மட்டுமில்லாமல் விநியோகஸ்தர்களுக்கும் நல்ல வருமானத்தை கொடுத்திருந்தது. அந்த காலகட்டத்தில் விஜயகாந்தினுடைய படங்களை ஓட்டி விநியோகம் செய்வதில் மதுரையில் அதிகம் இருந்தார்கள். அப்படிப்பட்ட திரையரங்கில் ஒன்றுதான் காசி திரையரங்கம்.

திரையரங்கு ஊழியர்கள் பேட்டி:

இவர்கள் கேப்டன் நினைவாக தங்களுடைய காசி திரையரங்கில் பேரரசு திரைப்படத்தை இலவசமாக திரையிட்டு வருகிறார்கள். இது தொடர்பாக அங்கு வேலை செய்த ஊழியர்கள், எங்கள் முதலாளி ஆரம்ப காலகட்டங்களில் கேப்டன் படங்களை ரிலீஸ் செய்வார். கேப்டன் மீது அதிக மரியாதை கொண்டவர். கேப்டன்னுடைய மறைவு எங்களை அதிர்ச்சி அடைய வைத்தது. அவருக்கு நாங்கள் செய்யும் திரை அஞ்சலி தான் இது. தினமும் நான்கு காட்சிகள் மக்களிடம் கட்டணம் வாங்காமல் காட்சி படுத்தி வருகிறோம். மக்களும் ஆர்வமாக வருகிறார்கள். கேப்டன் இல்லை என்றாலும் அவர் புகழ் பாடும் என்று கூறியிருக்கிறார்கள்.

Advertisement