கஷ்டத்தில் கைகொடுத்த ராவுத்தரை கேப்டன் பிரிந்த காரணம் – இறப்பில் கண் கலங்கிய காரணம்.

0
1633
Vijayakanth
- Advertisement -

விஜயகாந்த்- ராவுத்தரின் பிரிவுக்கு காரணமானவர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் இவர் சினிமாவில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது.

-விளம்பரம்-

கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். மேலும், சமீப காலமாக இவருக்கு உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் விஜயகாந்த்- ராவுத்தர் குறித்து பலரும் அறிந்திடாத தகவல் குறித்து இங்கு பார்க்கலாம்.

- Advertisement -

விஜயகாந்த்- இப்ராஹிம் ராவுத்தர் :

விஜயகாந்த்- இப்ராஹிம் ராவுத்தர் இருவரும் சிறு வயதிலேயே நல்ல நண்பர்களாக இருந்தவர்கள். இவர்களுடைய நட்பு மதுரையில் தான் தொடங்கியது. பள்ளி பருவத்தில் இருந்து இருவரும் ஒன்றாக அலைந்து, திரிந்து விளையாடி இருந்தவர்கள். பின் ராவுத்தர் கதாசிரியர், விஜயகாந்த் நடிகராக ஆக வேண்டும் என்று சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார்கள். பட கம்பெனி முதல் எந்த இடத்துக்கு போவது என்றாலும் இருவரும் சேர்ந்துதான் போவார்கள்.

விஜயகாந்த்- இப்ராஹிம் ராவுத்தர் நட்பு :

சொல்லப்போனால், விஜயகாந்தின் வளர்ச்சிக்கு பக்கபலமாக ராவுத்தர் இருந்தார். அதை பல இடங்களில் விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். இப்ராஹிம் மிகப் பிரபலமான தயாரிப்பாளராக இருந்தார். விஜயகாந்த் நடிக்கும் படங்களை ராவுத்தர் தான் முடிவு செய்தார். இவர்களுடைய நட்பை பார்த்து திரை உலகமே ஆச்சரியப்பட்டது. அதேபோல் ராவுத்தர் பேச்சை விஜயகாந்த்தும் தட்ட மாட்டார். நடிகர் விஜயகாந்தின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் பற்றி யாருக்கும் சொல்ல வேண்டிய தேவையில்லை. சூப்பர் ஹிட் கொடுத்தது. அந்த மிரட்டலான படத்தை எடுத்தவர் ராவுத்தர் தான்.

-விளம்பரம்-

விஜயகாந்த் திருமணம்:

பின் விஜயகாந்த்திற்கு திருமணமான பின்னர் படிப்படியாக ராவுத்தர் ஓரம் கட்டப்பட்டார். மேலும், இவர்களுடைய இருவரின் பிரிவிற்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. கடைசி நிமிடத்தில் ராவுத்தரை பார்த்துக் கொள்ளாமல் விஜயகாந்த் கைவிட்டு விட்டார். அந்த குற்ற உணர்ச்சி தான் விஜயகாந்தை மனதளவில் வேதனைப்படுத்தியது என்று பலரும் சொல்வார்கள். விஜயகாந்திற்கு திருமணமான பிறகு அனைத்தும் பிரேமலதாவின் கண்ட்ரோலுக்கு சென்று விட்டது. திருமணத்திற்கு முன்பு வரை விஜயகாந்த் நடிக்கும் படம், படத்தின் டேட், சம்பளம் என எல்லாமே ராவுத்தர் தான் சொல்லுவார்.

கதறி அழுத கேப்டன் :

அது மட்டும் இல்லாமல் அந்த பணத்தை எல்லாம் எதில் முதலீடு செய்ய வேண்டும் என்ற முடிவையும் ராவுத்தர் தான் எடுப்பார். ஆனால், திருமணத்திற்கு பிறகு எல்லாம் மாறி விட்டது. பின் ராவுத்தருக்கு சேர வேண்டிய பணம், சொத்தை எல்லாம் விஜயகாந்த் பிரித்துக் கொடுத்துவிட்டார். இருந்தாலும், தன்னுடைய நண்பனை பிரிந்து விட்டோமே என்ற வருத்தம் அவருடைய மனதில் இருந்து கொண்டு தான் இருந்தது. ராவுத்தரின் இறுதி சடங்கில் விஜயகாந்த் கதறி அழுதது அவர்களுடைய நட்புக்கு சாட்சியாக இருந்தது. பின் சிறிது காலம் ராவுத்தர் ஃபிலிம்ஸ் முடங்கி கிடந்தது. தற்போது மீண்டும் படத்தை இயக்க இருக்கிறது.

Advertisement