விஜயகாந்த் மகனின் திருமணம் தள்ளி போகும் காரணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான். கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்று முன் தினம் காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றார்கள். மேலும், விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை அதிகம் பாதித்து இருக்கிறது. அதோடு விஜயகாந்த் இறப்பில் அவர் இரண்டு மகன்கள் கதறி கதறி அழுது இருக்கிறார்கள். விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் விஜயகாந்த்க்கு உள்ளனர். இளையவரான சண்முக பாண்டியன் தனது தந்தையின் வழியை பின்பற்றி சினிமாவில் நடித்து உள்ளார்.
விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம்:
விஜய பிரபாகரன் தாயார் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மாமா எல் கே சதீஷ் ஆகியோரை பின்பற்றி தேமுதிக-வில் செயல்பட்டு வருகிறார். பின் 2019 டிசம்பரில் விஜய பிரபாகரனுக்கும், கோவையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவனின் மகள் கீர்த்தனாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்து சில ஆண்டுகள் ஆகியும் அவர்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
திருமணம் நடக்காததற்கு காரணம்:
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திருமணம் தள்ளி சென்றது. அதோடு திருமணத்தை பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வைக்க வேண்டும் என்று விஜயகாந்த் விரும்புவதாகவும், அவரது தேதிக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் உண்மையான காரணம் விஜயகாந்த் உடல்நிலை தான் என்று கூறுகிறார்கள். அதிலும் கடந்த ஒரு வருடமாகவே விஜயகாந்த் உடைய உடல் நிலையும் ரொம்ப மோசமாக இருந்தது. இதனால் விஜயகாந்த் மகனின் திருமணம் தள்ளிக்கொண்டே சென்றிருந்தது.
விஜயகாந்தினுடைய நிறைவேறாத ஆசை:
இப்படி இருக்கும் நிலையில் யாரும் எதிர்ப்பாகாத வகையில் விஜயகாந்த் இறந்திருப்பது பலருக்குமே பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. மேலும், விஜயகாந்தினுடைய நிறைவேறாத ஆசைகளில் அவருடைய மகன் திருமணமும் ஒன்று. பின் அவரின் புது வீடு. சென்னையில் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் விஜயகாந்த் அவர்கள் புதிதாக பிரம்மாண்டமாக வீடு ஒன்று கட்டி வருகிறார். இதில் தான் விஜயகாந்த் குடிபெயரப்போவதாகவும் கூறியிருந்தார்.
புது வீடு குறித்த தகவல்:
காட்டுப்பாக்கத்தில் சுமார் 20000 சதுர அடியில் புதிதாக விஜயகாந்த் வீடு ஒன்றை கட்டி வந்தார். 2013 ஆம் ஆண்டு இந்த புது வீடு கட்டும் பணி தொடங்கியது. இடையில் சில பிரச்சினைகளால் நின்றது. பின் பத்தாண்டுகளாக இந்த வீட்டினுடைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்போது 90% இந்த புது வீட்டின் பணிகள் நிறைவடைந்து இருக்கிறது. அதற்குள் விஜயகாந்த் இறந்திருப்பது பலருக்குமே சோகத்தை ஏற்படுத்திருக்கிறது.