மஞ்சுளாவின் 10 ஆண்டு நினைவு நாள் – வனிதாவை தவிர நேரில் வந்து அஞ்சலி செலுத்திய விஜயகுமார் குடும்பத்தினர்.

0
2470
- Advertisement -

மறைந்த நடிகை மஞ்சுளாவின் பத்தாவது நினைவு நாளை விஜயகுமார் தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடி இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் மஞ்சுளா. இவர் எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், நாகேஷ் படங்களில் நடித்து இருந்தவர். மேலும், இவர் 70 காலகட்டத்தில் இருந்து சினிமாவில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவன் முதன்முதலாக சாந்தி நிலையம் என்ற படத்தில் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் மஞ்சுளா நடித்திருக்கிறார். அதோடு இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்ற பல மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த என் உள்ளம் உன்னை தேடுதே என்ற படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

மஞ்சுளா-விஜயகுமார் குடும்பம்:

அதற்கு பிறகு இவர் சினிமாவில் நடிக்கவில்லை. இதனிடையே இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜயகுமாரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே விஜயகுமாருக்கு முதல் திருமணம் ஆகியிருந்தது. விஜயகுமாரின் முதல் மனைவியின் பிள்ளைகள் அருண் விஜய், அனிதா, கவிதா ஆவர். பின் விஜயகுமார்- மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என்ற மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூவருமே சினிமாவில் நடித்து இருக்கிறார்கள்.

விஜயகுமார் விவகாரம்:

இப்படி மஞ்சுளா இல்லை என்றாலும் கூட்டு குடும்பமாக விஜயகுமார் தன்னுடைய பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். இதில் வனிதா மட்டும் தான் இந்த விலகி இருக்கிறார் அது அனைவரும் அறிந்ததே. எந்த ஒரு விசேஷங்களிலும் வனிதாவை அவருடைய குடும்பத்தினர் சேர்த்துக் கொள்வதில்லை. இது குறித்து கூட சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்திருக்கிறது. ஆனால், வனிதாவின் மகனை விஜயகுமார் தான் பார்த்துக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

மஞ்சுளா நினைவு நாள்:

மேலும், 2013 ஆம் ஆண்டு உடல்நிலை குறைவால் மஞ்சுளா இறந்துவிட்டார். அவருடைய இறப்புக்கு காரணம் கிட்னி செயலிழப்பும், வயிற்றில் ஏற்பட ரத்த உறைவும் தான் காரணம் என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். இந்நிலையில் இன்று இவருடைய பத்தாவது நினைவு நாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மஞ்சுளாவின் பத்தாவது நினைவு நாளை ஒட்டி விஜயகுமார் தன்னுடைய குடும்பத்தினர் உடன் சேர்ந்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். மேலும், அலங்கரிக்கப்பட்ட மஞ்சுளாவின் புகைப்படத்திற்கு முன்பு நின்று விஜயகுமார், ப்ரீத்தா, ஸ்ரீதேவி, மருமகன்கள் பலரும் மலர் தூவி மரியாதை செய்து இருக்கிறார்கள்.

ஸ்ரீதேவி பதிவு:

தற்போது இந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பகிர்ந்து ஸ்ரீதேவி அவர்கள் கூறியது, அம்மாவின் பத்தாவது நினைவு நாள். அம்மாவை நேசிப்பவர்கள் நம்மை விட்டு விலகுவதில்லை. மரணம் கூட தொடமுடியாத விஷயங்கள் இருக்கின்றது.. உன்னை ரொம்ப மிஸ் செய்கிறேன் அம்மா. எங்களுடைய எல்லா மகிழ்ச்சிக்கும் பாசிட்டிவிட்டிக்கும் நீங்கள் தான் காரணம். நாங்கள் எப்பொழுதும் உங்களை கொண்டாடுவோம். லவ் யூ அம்மா என்று கூறியிருக்கிறார். இப்படி ஸ்ரீதேவி பதிவிட்ட பதிவிற்கு வனிதா மட்டும் மிஸ்ஸிங் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement