லியோ பட ஷூட்டிங்கில் இணைந்த மாஸ் நடிகர் – கட்டி தழுவி வரவேற்ற விஜய்

0
405
- Advertisement -

விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தளபதி 67 படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இணையும் வீடியோ ஓன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘வாரிசு’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு என இரண்டும் ரசிகர்களை திருப்த்தி படுத்த தவறிய நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை தான் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதால் தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளுக்காக படக்குழு காஷ்மீர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

காஷ்மீரில் ஷட்டிங் :

இப்படி நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி 67 படக்குழு அனைவரும் காஷ்மீர் சென்றனர். இவர்கள் காஷ்மீர் செல்கையில் படக்குழுவின் பல புகைப்படங்களும், விடீயோக்களும் சோசியல் மீடியாவில் படு பயங்கரமாக வைரலாகியது. அதோடு பலரும் படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து ரசிகர்கள் ஒவ்வொரு கதைகளை கூறி வந்தனர். மேலும் பலரும் இந்த கதை லோகேஷ் சினிமெடிக் யூனிவெர்சில் வரும் என்று உறுதியாக கூறி வருகின்றனர் அதற்கான வாய்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.

அடுத்தடுத்து வரும் அப்டேட் :

தொடர்ந்து படப்பிடிப்பு பற்றிய சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில் சமீபத்தில் கூட விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனாவாக அசத்திய வசந்தி காஷ்மீரில் நடக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருந்தார். அது தொடர்பான விடியோக்கள் ஷோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதனை தொடர்ந்து சமீபத்தில் கெளதம் மேனன் மற்றும் மிஸ்கின் என இருவரின் படப்பிடிப்பு காட்சிகளும் நிறைவடைந்தது சென்னை திரும்பியிருந்த்னர்.

-விளம்பரம்-

வைரல் வீடியோ :

இந்த நிலையில் லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தற்போது படக்குழுவுடன் இணைத்திருக்கிறார் என்ற தகவலை இந்த வீடியோவின் மூலம் உறுதி செய்திருக்கின்றனர். அதோடு அந்த வீடியோவில் விமானத்தின் மூலம் காஷ்மீர் வரும் சஞ்சய் தத்தை லியோ படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் அவர்களிடம் இணை தயாரிப்பாளர் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.

இதனையடுத்து காரை விட்டு இறங்கிய சஞ்சய் தத் விஜய்யை தேட, லாங் ஹேர், சால்ட் அன்ட் பெப்பர் என மாறுபட்ட லுக்கில் வந்த விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த சஞ்சய் தத்தை வரவேற்கிறார். இந்நிலையில் லியோ படம் வரும் ஆக்டோபர் மாதம் வெளியாகும் என்ற நிலையில் இந்த வீடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி தற்போது சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது

Advertisement