அஜித் பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கும் விக்ரம் – விபரம் உள்ளே

0
891
vikvishnu

சியான் விக்ரமிற்கு கடைசியாக வந்த இருமுகன் படம் செம்ம ஹிட் கொடுத்தது. அதே உற்சாகத்தில் அடுத்த வருடம் மூன்று படங்களை ரிலீஸ் செய்ய தயாராகி வருகிறார். தற்போது வரும் பொங்கலுக்கு தமன்னாவுடன் நடித்துள்ள ஸ்கெட்ச் படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை விஜய் சந்தர் இயக்குகியுள்ளார்.

vikram

தற்போது கௌதன் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வரும் அவர் ஹரி இயக்கத்தில் சாமி-2 படத்திலும் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களும் கண்டிப்பாக 2028 ரிலீஸ் என தெரிகிறது.

இந்த இரண்டு படங்கள் முடிந்து அஜித்தை வைத்து பில்லா ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கிய விஸ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விக்ரம். இந்த படத்திற்கான பேச்சு வார்த்தை இன்னும் ஆரம்பகட்டத்தில் உள்ளதாக இயக்குனர் விஷ்ணுவர்த்தன் கூறியுள்ளார்.

Vishnuvardhans

எப்படி பார்த்தாலும் விக்ரமை வைத்து ஒரு செம்ம ஆக்சன் படம் உறுதி என தெரிகிறது.