தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் தற்போது இமாலய இடத்தில இருப்பது விஜய் மற்றும் அஜித் தான். இவர்கள் இருவருக்கும் உள்ள ரசிகர்களின் பட்டாளம் நாம் அனைவரும் அறிந்ததே. பெரும்பாலும் பிரபலங்களிடம் பேட்டி எடுக்கும் போது இவர்கள் இருவரை பற்றிய கேள்வி இடம்பெறாமல் இருக்காது. அதே போல விக்ரம் மகன் துருவிடமும் கேட்கப்பட்டுள்ளது.
விக்ரம் மகன் துருவ், வர்மா படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி அடைந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் இது. இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் விக்ரமின் மகன் துருவ் தான் நடித்த துருவ் படம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்திருந்தார். அப்போது அவரிடம் தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு நான் தளபதியின் ரசிகர் என்று கூறியுள்ளார் துருவ்,