தன்னுடய Galaxy Star பட்டம் குறித்து விமல் கேட்ட கேள்வி – எவ்ளோ வெல்லந்தியா இருக்காரு.

0
1096
- Advertisement -

தனக்கு கொடுத்த கேலக்ஸி ஸ்டார்ட் பட்டம் குறித்து விமல் கூறி இருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விமல். இவர் சினிமா உலகில் நுழைந்து 20 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. இந்த 20 ஆண்டுகளில் இவர் தேசிய விருதை வாங்கவில்லை என்றாலும் இவர் நடித்த படங்கள் அதிகம் தேசிய விருது வாங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் படங்களில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன ரோலில் தான் நடித்து இருந்தார். அதன் பின் இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதை தொடர்ந்து இவர் களவாணி படத்தில் நடித்திருந்தார். இந்த களவாணி படத்தின் மூலம் தான் இவருடைய சினிமா பயணம் வேற லெவலுக்கு சென்றது. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருந்தார்.

- Advertisement -

விமல் திரைப்பயணம்:

பின் கடந்த சில வருடங்களாக இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் இவருக்கு கை கொடுக்கவில்லை. இதனால் இவர் 3 ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்தார். பின் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகி இந்த படம் விலங்கு. இது ஒரு வெப் சீரிஸ். இந்த படத்தை பிரசாத் பாண்டிராஜ் இயக்கி இருந்தார். இது ரசிகர்களை மத்தியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. பின் விமல் நடிப்பில் வெளிவந்த படம் குலசாமி. இந்த படத்தை இயக்குனர் சரவண சக்தி இயக்கி இருந்தார்.

விமல் நடித்த படங்கள்:

இந்த படத்தில் தன்யா ஹோப், வினோதினி, கீர்த்தனா, போஸ் வெங்கட், முத்துப்பாண்டி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். அதற்குப்பின் இவர் நடிப்பில் வந்த படம் தெய்வ மச்சான். ஆனால், இந்த ஆண்டு வெளியான விமலின் இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. சமீபத்தில் விமல் நடிப்பில் வெளிவந்த படம் துடிக்கும் கரங்கள். வேலுதாஸ் இயக்கத்தில உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் மும்பை மாடல் மனிஷா கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

கேலக்ஸி ஸ்டார் :

இவர்களுடன் படத்தில் சுரேஷ் மேனன், சதிஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். ஆனால், இந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கொடுக்கவில்லை. இதனை அடுத்தும் சில படங்களில் விமல் கமிட்டாகி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே நடிகர் விமலை பலருமே கேலக்ஸி ஸ்டார் என்று பட்டம் வைத்து அழைக்கிறார்கள். பொதுவாகவே ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒரு பட்டப்பெயர் ரசிகர்கள் கொடுப்பது வழக்கம் தான். அந்த வகையில் நடிகர் விமலுக்கு கேலக்ஸி ஸ்டார் என்று கொடுத்திருக்கிறார்கள்.

விமல் அளித்த பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் விமல் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவரிடம் உங்களுக்கு கொடுத்திருக்கும் கேலக்ஸி ஸ்டார்ட் பட்டம் குறித்து கூறுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு விமல், கேலக்ஸி அப்படி என்றால் என்ன? என்று தொகுப்பாளரிடம் கேட்டிருக்கிறார். அவர் கேலக்ஸி என்றால் இந்த உலகத்தை தாண்டி விண்வெளி பிரபஞ்சம் என்று உலறிக் கொண்டிருந்தார். உடனே விமல் தெரியவில்லை என்றால் விட்டுவிடுங்கள் என்று சொன்னவுடன் இன்னொருத்தர் பிரபஞ்சத்தை தான் கேலக்ஸி என்று கூறினார். பின் விமல், சமீப காலமாகவே என்னை கேலக்ஸி ஸ்டார் என்று தான் சொல்கிறார்கள் என்று பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..

Advertisement