நீட்டுன இடத்துல எல்லாம் கையெழுத்து போட்டு என் தலையெழுத்தே மாறி போச்சு- வேதனையில் விமல்

0
1854
- Advertisement -

சினிமாவில் தன்னுடைய கடந்த காலம் குறித்து வேதனையில் நடிகர் விமல் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விமல். இவர் படங்களில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

-விளம்பரம்-

அதை தொடர்ந்து இவர் களவாணி படத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த களவாணி படத்தின் மூலம் தான் இவருடைய சினிமா பயணம் வேற லெவலுக்கு சென்றது. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருந்தார். கடந்த சில வருடங்களாக இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் இவருக்கு கை கொடுக்கவில்லை. அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் விலங்கு. இது ஒரு வெப் சீரிஸ்.

- Advertisement -

விமலின் திரைப்பயணம்:

இந்த படத்தை பிரசாத் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இந்த வெப் சீரிஸ் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இது ரசிகர்களை மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. பின் விமல் நடிப்பில் வெளிவந்த படம் குலசாமி. இந்த படத்தை இயக்குனர் சரவண சக்தி இயக்கியகிறார். இந்த படத்தில் தன்யா ஹோப், வினோதினி, கீர்த்தனா, போஸ் வெங்கட், முத்துப்பாண்டி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அதற்குப்பின் வெளிவந்த படம் தெய்வ மச்சான்.

துடிக்கும் கரங்கள்:

இப்படி இந்த ஆண்டு வெளியான விமலின் இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. தற்போது விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் துடிக்கும் கரங்கள். வேலுதாஸ் இயக்கத்தில உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் மும்பை மாடல் மனிஷா கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இவர்களுடன் படத்தில் சுரேஷ் மேனன், சதிஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

இந்த படத்தை ஓடியன் டாக்கீஸ் சார்பில் கே அண்ணாதுரை தயாரித்து வருகிறார். பிரபல இசையமைப்பாளர் மணிசர்மாவின் சகோதரர் ராகவ் பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படம் வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தான் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துடிக்கும் கரங்கள் படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் விமல் சொன்னது:

இதில் கலந்து கொண்ட விமல் தன்னுடைய கடந்த காலம் சினிமா குறித்து கூறியிருந்தது, சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் படம் தானே என்று காண்பித்த இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டேன். அதற்கெல்லாம் மொத்தமாக சேர்த்து வைத்து கிடைத்துவிட்டது. என்னை வைத்து படம் எடுக்கலாமா என பலரும் தயங்கும் அளவிற்கு கடந்த மூன்று வருடங்கள் ஓடிவிட்டது என்று வேதனையில் விமல் பேசி இருக்கிறார். ஆக, இந்த படமாவது விமலிற்கு கை கொடுக்குமா? என்பதை பார்க்கலாம்.

Advertisement