ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிக்கும்போதே அவரின் பெயரை கேடுக்க கூடாது என்று பயந்து கொண்டே நடித்தேன் என்று ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 இசைவெளியீட்டு விழாவில் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான “சந்திரமுகி” படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. தமிழில் வெளியான இந்த படம் தெலுகு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு மற்ற மொழிகளிலும் படு ஹிட்டானது. இயக்குனர் பி வாசு இயக்கிய இந்த படத்தில் ரஜினியின் நண்பராக இளைய திலகம் பிரபுக்கு நடித்திருப்பார்.
மேலும், அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். சந்திரமுகியாக முக்கிய கதாபத்திரத்தில் நடித்த ஜோதிகாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டதோடு, இந்த படம் அவருக்கு ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இந்த திரைப்படம் வெற்றிகரமாக இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2 விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடபடுகின்றது. இதில் ராகவா லாரான்ஸ் இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மைசூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது.
ராகவா லாரன்ஸ் கூறியது:
இந்நிலையில் நேற்று சென்னையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் ராகவா லாரன்ஸ் கூறுகையில் சந்திரமுகி படம் நான் பண்ணுவதற்கு வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கும் பி.வாசு சார் என்னை தேர்வு செய்து வெற்றி படங்களை கொடுத்து வந்த சுபாஸ்கரன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வாசு சார் கதையை சொல்லி முடிக்கும் போது எனக்கு இந்த கதையின் பிரம்மாண்டம் தான் தெரிந்தது. அந்த பிரம்மாண்டமான படம் யார் எடுப்பார்கள் என்றால் லைக்கா நிறுவனம் தான். அவர்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் என்று எல்லாம் மிகப்பெரிய வெற்றியாக இருக்கிறது.
இந்தப் படத்தின் கதையைக் கேட்டு முடித்த பின் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை இந்த படத்தை பண்ணலாம் என்று சொன்னார்கள். இது போல் பெரிய நிறுவனத்தின் படம் நடிப்பது எனக்கு மிகவும் சந்தோஷம். இது அனைத்தையும் தாண்டி சூப்பர் ஸ்டார் என் தலைவர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் ஆரம்பித்தில் இருந்து முடிவடையும் வரை அவருடைய ஆசிர்வாதம் இருந்து கொண்டே இருந்தது.
அவருடைய வீட்டிற்கு சென்று ஆசீர்வாதம் வாங்கினேன். இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பாகவும் தொலைபேசியில் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினேன். இந்த கதையை பொறுத்த வரைக்கும் நான் தலைவரின் வேட்டையன் கதாபாத்திரத்தில் எடுத்து இருக்கிறேன். இந்த கதாபாத்திரத்தை எடுத்து நடிக்கும் போது பயத்தில் தான் நடித்தேன் தலைவரின் பெயரை கெடுக்க மாட்டேன். அதனால் இதை நீங்கள் பார்த்து சொல்லுங்கள். என்று கூறினார்.