சினிமாவிற்காக இப்படி ஒரு அரசு வேலையை விட்டு வந்துள்ள மறைந்த நடிகர் வினுசக்கரவர்த்தி

0
837
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் வினுசக்கரவர்த்தி. இவர் நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளரும் ஆவார். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தமிழ் மதுரை மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அதோடு இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும், படங்களில் இவர் நகைச்சுவை, குணச்சித்திர, வில்லன் கதாபாத்திரங்களில் தான் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மதுரை மண்ணில் பிறந்த இவர் தன்னுடைய பள்ளி படிப்பை சென்னையில் முடித்து காவல் துறையில் சேர்ந்துள்ளார். பின்னர் தெற்கு ரயில்வேயில் உயர் அதிகாரியாக பொறுப்பேற்று சில காலங்கள் பணிபுரிந்து பின்னர் சினிமாவில் உள்ள மோகத்தின் காரணமாக அந்த வேலையே ராஜினாமா செய்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். இதற்க்கு பிறகு பிரபல கன்னட இயக்குனரான புட்டண்ணா கனகல் இடம் சிஷ்யனாக சேர்கிறார்.

- Advertisement -

புட்டண்ணா கனகல் இவருக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான பாரதிராஜாவுக்கு குருவாக இருந்தவர். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் ஹிந்தி என பல மொழிகளில் 1000திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி இருக்கிறார் நடிகர் வினுசக்கரவர்த்தி.

இப்படி சினிமா துறையில் பல சாதனைகளை செய்த இவர் தான் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவை சினிமா உலகிற்கு அறிமுகம் செய்து ஸ்மிதாவை வண்டி சக்கரம் என்ற படத்தின் மூலம் தான் சில்க் ஸ்மிதா சினிமா உலகிற்கு அறிமுகமானார். அந்தப் படத்தின் மூலம் இவர் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த, பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நெருக்கமாகவும் பிடித்த நடிகராகவும் இருந்துள்ளார். ஆனால் பல சினிமாக்களில் நடித்திருந்தாலும் எப்படியாவது ஒரு படத்தை இயக்கி விட வேண்டும் என்ற ஆசை இவருக்கு இருந்திருக்கிறது. ஆனால் அது கடைசி வரை நிறைவேறாமலே சென்று விட்டது இதுதான் அவரின் நிறைவேறாத ஆசை என்று அவரது மனைவி சித்ரா லட்சிமி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

Advertisement