ஆயிஷா,ரஷிதா சிபாரிசில் போராடி பிக் பாஸ் வாய்ப்பைத் தட்டித் தூக்கிய சீரியல் நடிகர்.

0
831
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்சிகளில் மிகவும் புகழ் பெற்ற நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் இந்த நிகழ்ச்சி சீசன் 7 வரை வந்துள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மற்றொரு பலம் என்றால் உலக நாயகன் கமல்ஹாசன் தான். இவர் தான் இந்த நிகழ்ச்சிற்கு தொகுப்பாளராக இருந்து வருகிறார். முதல் சீசனை தொடர்ந்து தற்போது ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஆறு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-
BiggBoss7

தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியில் யார்? கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் மத்தியில் அதிக ஆவல் ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலக்கப்போவது யாரு காமெடி நடிகர் சரத், பாவனா, மாகாபா, உமாரியாஸ் நடிகர் ஆடிஷனில் கலந்து இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் விஜய் டிவி சார்பாக யார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பார்கள் என்று தெரியவில்லை.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி:

இது தவிர, சோஷியல் மீடியாவில் வைரலானவர்கள், ஒருகாலத்தில் பரபரப்பாக இருந்து இன்று ஒதுங்கியிருக்கும் சீனியர் நடிகைகள், மாடல்கள், வெளிநாடுவாழ் தமிழர்கள் என்று கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, இந்த முறை நிகழ்ச்சியில் இரண்டு வீடு என்று உறுதி செய்து இருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். மேலும், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் 1ஆம் தேதி தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இதனால் இன்னும் சில நாட்கள் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் வருடம் வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பலபேர் முயற்சி செய்து அது நடக்காமல் சென்று இருக்கின்றது. அந்த வகையில் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முயற்சித்த சின்னத்திரை நடிகர் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அவர் வேறு யாரும் இல்லைங்க, நம்ம சத்யா சீரியல் அமுல் பேபி தான்.

-விளம்பரம்-

அவருடைய உண்மையான பெயர் விஷ்ணு. இவர் சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியல் மூலம் அவரை பலருமே அமுல் பேபி என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். தற்போது இவர் வேற மாதிரி ஆபீஸ் என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பழைய போட்டியாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை அடுத்த சீசனில் கலந்து கொள்ள சிபாரிசு செய்வது வழக்கம் தான். அப்படித்தான் ராபர்ட் மாஸ்டரை வனிதா விஜயகுமார் சிபாரிசு செய்தது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் தற்போது விஷ்ணுவையும் இந்த சீசனில் கலந்து கொள்ள சிபாரிசு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சீசனில் பங்கேற்ற சத்யா சீரியல் நடிகை ஆயிஷா இவரின் காதலி. பின் சில சர்ச்சைகளால் இருவரும் பிரிந்து விட்டார்கள். அதேபோல ரக்ஷிதாவுடன் சேர்ந்து விஷ்ணு சீரியல் ஒன்றில் நடித்திருக்கிறார். இவர்கள் இருவருடைய சிபாரிசில் இந்த சீசனில் விஷ்ணுவிற்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது. நிகழ்ச்சியில் விஷ்ணு தன்னுடைய காதல் லீலையில் பெண்களை விழ வைப்பாரா? இல்லை நண்பராகவே இருந்து வருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement