மீண்டும் தமிழ் மொழிக்கான நிகழ்ச்சியில் களமிறங்கிய ஜேம்ஸ் வசந்தன் – மாணவர்களுக்கு அழைப்பு.

0
2030
- Advertisement -

90ஸ் கிட்ஸ்களுக்கு பரிட்சியமான பல தொகுப்பாளர்களில் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர். தெளிவான தமிழ் பேசும் தமிழ் தொகுப்பாளர்களில் இவருக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. இவர் தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர், இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.மேலும், இவர் சுப்பிரமணியபுரம், பசங்க, நாணையம், ஈசன், நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.

-விளம்பரம்-

இவர் நிறைய ஆல்பம் பாடல்களைக் கூட இசையமைத்து உள்ளார். அதே போல இவை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஒரு வார்த்தை ஒரு லட்சம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். சமீப காலமாக இவரை எந்த ஒரு டிவி நிகழ்ச்சிகளிலோ மேடை நிகழ்ச்சிகளிலோ காண முடிவதில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது அனைவர் பற்றியும் புட்டு புட்டு வைத்தார்.

- Advertisement -

தமிழோடு விளையாடு :

அதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி பல சமூக பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார். இப்படி ஒரு நிலையில் ஜேம்ஸ் வசந்தன் மீண்டும் தொகுப்பாளராக களமிறங்க இருக்கிறார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ”தமிழோடு விளையாடு’ என்கிற மொழி விளையாட்டு நிகழ்ச்சியை கலைஞர் தொலைக்காட்சியில் நடத்த இருக்கிறேன். இதில் பள்ளி அணிகள் பங்கேற்கலாம்.

மாணவர்களுக்கு அழைப்பு :

பங்கேற்க விருப்பமுள்ள பள்ளிகள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பள்ளிக்கு மட்டுமே வாய்ப்பு. எல்லா மாவட்டங்களுக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதற்காக இந்த அமைப்பு. நிறைய பள்ளிகளைக் கொண்ட பெரிய ஆறு மாவட்டஙகளுக்கு மட்டும் இரு அணிகளுக்கு இடமுண்டு என்று பதிவிட்டுள்ள அவர் [email protected] என்ற இ-மெயில் லிங்க்கையும் பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-

சமீப காலமாக விஜய் டிவி நிகழ்ச்சிகளை கூட ஜேம்ஸ் வசந்தன் விமர்சித்து வந்தார். அதிலும் குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்து பதிவு ஒன்றை போட்டிருந்த ஜேம்ஸ் வசந்தன் ‘தற்செயலாக TV பார்த்தேன். Vijay TV Super Singer Junior FINALS LIVE போய்க்கொண்டிருக்கிறது.ஒரு 8-வயது (இருக்கலாம்) பெண் குழந்தை ‘கருத்தவன்ல்லாம் கலீஜாம்’ பாட்டை முழு ஈடுபாட்டுடன் பாடிக்கொண்டிருக்கிறது. பாடலின் இடையில் வருகிற ‘தக்காளி’ என்கிற வார்த்தையை அந்தப் பாடகரைப் போலவே அழுத்தமாகச் சத்தமிட்டுச் சொல்கிறது கள்ளமறியா அந்தப் பிஞ்சு உதடுகள்.எனக்கு ‘திக்’கென்கிறது. அது ஒரு கேவலமான கெட்ட வார்த்தையின் இணைச்சொல் என்பது ஆண்கள் எல்லோருக்கும் தெரியும்.

தக்காளி என்பது கெட்ட வார்த்தையா :

அந்தச் சொல்லைப் பாடினால் ஊரு திட்டும், சென்சார் பிரச்சனை வரும்.அதனால் அதே போலவே ஒலிக்கிற இந்தச் சொல்லைச் சொல்லி மகிழ்கிற உயரிய சிந்தனையுடைய பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், நடிகரின் சமூகப் பங்களிப்பு இது. இது ஒரு புறம்!ஆனால், இந்தப் பாடலையும், அந்தக் குறிப்பிட்டச் சொல்லையும் அந்தக் குழந்தைக்கு அட்சரம் பிசகாமல் சொல்லிக்கொடுத்த பெற்றோரையும், இசை ஆசிரியரையும், நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவினரையும் தமிழ்ச் சமூகம் காலத்துக்கும் வாழ்த்த வேண்டும்!

ஜேம்ஸ் வசந்தன் வேதனை :

கெட்ட வார்த்தைகளைப் பாடித்தான் உங்கள் வாழ்க்கையை நடத்தவேண்டிய நிலையில் நீங்களெல்லாம் இருக்கிறீர்களென்றால் அதற்கான தளத்தைத் தேர்ந்தெடுங்கள். ஆண்களுக்கு மட்டும் பெரியவர்களுக்கு மட்டும் என்பது போன்ற எச்சரிக்கையுடன் வெளியிடுங்கள். அதற்குப் பிறகு அது பயனாளரின் பொறுப்பு! இப்படி குழந்தைகளும் கேட்கிற, பாடுகிற வெகுஜன ஊடகமான சினிமாப் பாடல்களுக்குள் நஞ்சை இடைச்சொருகல் செய்து ஒட்டுமொத்தமாய் எல்லாரையும் களங்கப்படுத்தாதீர்கள் என்று கூறி இருந்தார்.

Advertisement