விசுவாசம் படத்தில் காமெடியன் இவரா ! அப்போ காமெடிக்கு பஞ்சம் இல்லை !

0
3318
ajith visvasam

தல அஜித் மற்றும் அவரது நீண்டகால இயக்குனர் சிவா ஆகியோர் தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்துள்ளனர். இந்த படத்திற்கு விஸ்வாசம் என பெயரிடப்பட்டுள்ளது. முந்தைய படமான விவேகம் படத்திற்கு பணியாற்றிய டெக்னீசியன்கள் இந்த படத்திற்கும் வேலை செய்வார்கள் என கூறப்பட்டது.

Yogi Babu

ஆனால் இசையமைப்பாளர், காமெடியன் என ஒரு சிலரை மாற்ற உள்ளார் சிவா. ஆனால் படத்தின் சூட்டிங் இன்னும் துவங்க வில்லை. இருந்தும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டுள்ளது.

சூட்டிங் இன்னும் துவங்காத இந்த வேளையில் தற்போது விஸ்வாசம் படத்தின் காமெடி நடிகர் யோகி பாபு என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது. மேலும் , படத்தின் சூட்டிங் இந்த மாத இறுதியில் துவங்க உள்ளது.