விசுவாசம் படத்தில் சசிகர்கள் கேட்டதை செய்த தல அஜித் ! குஷியில் ரசிகர்கள்

0
999

தல அஜித் மற்றும் சிவா கூட்டணியில் தொடர்ந்து நான்காவது முறையாக ஒரு படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு விஸ்வாசம் என பெயரிடபட்டுள்ளது. இந்த வருட தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் சூட்டிங் தற்போது வரை துவங்கவில்லை என கவலை தல ரசிகர்களிடம் இருந்தது.

visvasam

மேலும், தல இந்த படத்தில் மிக இலமையாக நடிக்க போகிறார் என தகவல் வந்தது. ஆனால், அவர் வெளியிட்ட புகைப்படங்களில் எல்லாம், வெள்ளை தலையுடனும் முடிக்கு கலரிங் செய்யாமலும் மிக எளிமையாக இருந்தார். மேலும், இந்த படத்திற்கு வேறு ஏதாவது இயக்குனரை தேர்வு செய்யலாமே என சத்யஜோதி பிலிம்ஸ் அஜித்திடம் கூறியுள்ளது.ஆனால் கண்டிப்பாக சிவா தான் வேண்டும் என கூறியுள்ளார் அஜித். இதனால் இந்த படம் கைவிடப்படும் என்ற நிலை உருவானது. இத்தனை சம்பவங்கள் நடைபெற்று தற்போது ஒரு வழியாக படத்திற்கான சூட்டிங் தேதியை அறிவித்துள்ளது படக்குக்குழு.

வரும், 23ஆம் தேதி விஸ்வாசம் படத்தின் சூட்டிங் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்களிடம் இருந்த அந்த கவலை போக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் செட்யூலில் அஜித் யங்காக இருக்கும் காட்சிகள் மும்பையில் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது.