பிரபல தொகுப்பாளினி மணிமேகலை- உசேனின் புது வீட்டு கிரஹப்பிரவேச போட்டோக்கள் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஒரு காலத்தில் சன் மியூசிக்கில் பிரபலமான விஜேவாக வலம் வந்தவர் மணிமேகலை. அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், தனது எதார்த்தமான பேச்சால் மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருகிறார். இதனால் இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.
இதனிடையே மணிமேகலை- உசேன் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். ஆனால், இவர்களின் காதலுக்கு இரு விட்டாரும் சம்மதிக்காததால் பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். உசேனில் மதத்திற்கு மணிமேகலை மாறாததால் உசேன் வீட்டிலும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.
மணிமேகலை குறித்து :
சமீபத்தில் தான் உசேன்- மணிமேகலை வீட்டில் சமரசம் ஆகி உள்ளார்கள் என்று தெரிகிறது. மணிமேகலை தற்போது பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் அடைந்தார். முதலில் அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த இவர் பிறகு, ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சியை ரக்ஷனோடு சேர்ந்து தொகுத்து வழங்கினார்.
யூடியூப் சேனல்:
அதன் பின், அந்த சீசனில் போட்டியாளராக இருந்த தொகுப்பாளினி பிரியங்காவுடன் ஏற்பட்ட சர்ச்சையால் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். அதேபோல், இந்த தம்பதி youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்கள். இந்த சேனலில் இவர்கள் தங்களது வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான தருணங்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் இவர்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் இவர்கள் ஒரு நிலம் வாங்கி அதற்கு HM லேண்ட் என பெயர் வைத்து வீடியோவையும் வெளியிட்டு இருந்தார்கள். தற்போது இவர்கள் சென்னையில் ஒரு புது வீட்டை வாங்கி இருக்கிறார்கள்.
மணிமேகலை பதிவு:
இது தொடர்பாக மணிமேகலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘எங்களுக்கு திருமணம் ஆன முதல் நாளிலிருந்து எங்களைப் பற்றி உங்களுக்கு தெரியும். எங்களுக்கு திருமணமான முதல் ஆண்டில் பத்தாயிரம் ரூபாய் வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டோம். இன்று சென்னையில் முக்கியப் பகுதியில் இருக்கும் ஒரு பிரீமியம் அப்பார்ட்மெண்ட் வீடு வாங்கி இருக்கிறோம். இது எங்கள் பெரிய கனவு மற்றும் நாங்கள் செய்த சாதனை.
புது வீடு கிரஹப்பிரவேசம் :
மேலும், நாங்கள் ஜீரோவில் இருந்து வாழ்க்கையை தொடங்கி எந்தவித உறுதுணையும் இல்லாமல் வாழ்க்கையை நடத்திக் கொண்டுச் சென்றது எங்களை வலிமையாக்கி நம்பிக்கையை விதைத்தது. நாளை எங்கள் திருமண நாளை நாங்கள் கொண்டாட இருக்கிறோம். எங்களுடைய மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்வதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த வீட்டினை 2021 இல் புக் செய்து விட்டோம். எங்களின் கைகளுக்கு வீடு வருவதற்காக நாங்கள் காத்திருந்தோம். இறுதியாக அந்த நாளும் வந்துவிட்டது . நாங்கள் அதற்காக கனவுக் கண்டு, கடினமாக உழைத்தோம். இப்போது கடவுள் எங்களுக்கு இந்த வாழ்நாள் பரிசை வழங்கி இருக்கிறார்’ என்று நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.