ஆபாச பேட்டிக்காக கைது செய்யப்பட்ட Youtube பிரபலங்கள் – பதறிப்போய் பார்வதி வெளியிட்ட வீடியோ.

0
3543

பெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்து வீடியோ வெளியிட்டதற்காக Chennai Talks என்ற யூடியூப் சேனலை சேர்ந்த மூன்று பேரை கைது செய்ததை போன்று பார்வதியையும் கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜே பார்வதி. இவர் கலாட்டா யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார். இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேலாக ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.

Vj பார்வதி பல்வேறு பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார்.அது போக பல பொது மக்கள் கருத்து கேட்கும் நிகழ்ச்சிகளில் கூட தொகுப்பாளராக இருந்துள்ளார். பொது இடங்களில் வரும் இளம் ஆண்கள் மற்றும் பெண்களிடம் மாதவிடாய், ஆணுறை, உடல் உறவு என்று பல்வேறு விடயங்கள் குறித்து கேள்வி கேட்டு அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவரது வீடியோக்களை பார்க்க ஒரு தனி கூட்டமும் இருக்கத்தான் செய்தது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பார்வதியை கைது செய்ய வேண்டும் என்று ஒரு சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே, சமீபத்தில் பெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்து வீடியோ வெளியிட்டதற்காக Chennai Talks என்ற யூடியூப் சேனலை சேர்ந்த மூன்று பேரை கைது செய்யப்பட்டது தான் காரணம். இதே போன்று பார்வதியும் பலரிடம் ஆபாசமாக பேட்டி எடுத்துள்ளதாகவும் எனவே, அவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைதளத்தில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து பார்வதி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு தனியார் யூடுயூப் சேனலில் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்ததர்க்காக மூன்று பேரை கைது செய்துள்னனர். இந்த செய்தி கேட்டதும் ஏன் நீங்க தான் கைது என்று மீம் போட்டு என்னை டேக் செய்கிறீர்கள். நான் மத்த யூடுயூப் வேனலில் கேட்பது போல கீழ்தரமான கேள்விகளை கேட்டது கிடையாது. எனவே, இதையெல்லாம் நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement