வடிவேல் பாலாஜி இறந்து ஒரு வாரம் கழித்து ரம்யா வெளியிட்ட வீடியோ – ரசிகர்களின் கமண்ட்ஸ்.

0
1603
ramya
- Advertisement -

விஜய் டிவி பிரபலமும் பிரபல காமெடி நடிகருமான வடிவேல் பாலாஜி உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் மேடை காமெடி கலைஞரும் காமெடி நடிகருமான பாலாஜி. வடிவேல் பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு சீசன் 4 மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அந்த சீசனில் வடிவேல் பாலாஜி பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.கலக்க போவது யாரு சீசன் 4 நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேரு காமெடி நிகழ்ச்சியில் அசத்திய வடிவேலு சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.வடிவேல் பாலாஜியின் மறைவிற்கு பல்வேறு சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரை பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வந்தனர்.

- Advertisement -

மேலும் நடிகர் விஜய் சேதுபதி கூட வடிவேலு பாலாஜியின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார். அதே போல விஜய் டிவியின் தொகுப்பாளியான ரம்யா கூட பாலாஜியின் மறைவின் போது ட்விட்டரில் வருத்தம் தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் பாலாஜியின் மறைவிற்கு ஒரு வாரம் கழித்து பாலாஜியின் மறைவு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வடிவேலு பாலாஜி இறந்து ஒரு வாரம் ஆகிறது. அவரை எத்தனை இப்போது நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், நான் இன்று காலை கூட அவரை நினைத்தேன் என்று கூறி வடிவேலு பாலஜியுடன் தனக்கு இருந்த அனுபவம் பற்றி கூறியிருக்கிறார் ரம்யா. இந்த வீடீயோவை கண்ட பலரும் இத்தனை நாள் கோமால இருந்தீங்களா என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement